இது பழைய மாடலை விட அதிக தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.
இது உலகின் நீளமான, இட வசதி கொண்ட காராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இடம் பெரியதாக இருந்தாலும் 5 சீட்டராகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகுள் பில்ட் - இன்,Bose ஆடியோ சிஸ்டம், கேமரா உள்ளிட்டவைகள் இருக்கின்றன.
சக்திவாய்ந்த SUV 830bhp கொண்ட மூன்று மோட்டார்கள் மற்றும் 205 kWh 24-மாட்யூல் அல்டியம் பேட்டரி பேக் கொண்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.
3.5 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வரை வேகத்தை எட்டும் என்பது ஆச்சரியமளிக்கிறது.
இந்த காரின் விலை ரூ 3.8 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சொகுசு கார் விற்பனைக்கு பெயர் போன, ஃப்ரைடே நைட் கார்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.