மேலும் அறிய

சீமான் மனநிலையை அவர் சோதிக்க வேண்டும்; அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது - கீதா ஜீவன்

நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் சீமான் கலைஞரை பற்றி இழிவாகவும், அவதூராகவும் பேசியதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது

கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மனநிலையை அவர் சோதிக்க வேண்டும்.. அரசியல அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது.. அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்.

சீமான் மனநிலையை அவர் சோதிக்க வேண்டும்; அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது - கீதா ஜீவன்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி, டூவிபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் சீமான் கலைஞரை பற்றி இழிவாகவும், அவதூராகவும் பேசியதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்தவர்.. மாற்றுத்திறனாளி, திருநங்கைகள், மகளிர், தொழிலாளர்கள் என அனைவர் வாழ்க்கையிலும் உரிமையை நிலைநாட்டியவர் கலைஞர் கருணாநிதி,கலைஞர் பற்றி இழிவாக பேசுவது வன்மையாக திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்கிறது... 

சீமான் மனநிலையை அவர் சோதிக்க வேண்டும்... பெண் காவலர்களையும், உயர் அதிகாரிகளின் தவறான முறையில் பேசுகின்றார் ஒருவர். இதற்கு பெண் காவலர்கள் புகார் கொடுத்து இருக்கின்றார். அதற்கு வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. பெண் காவலர்களை தவறாக சொன்னவர்களை இவர் ஏற்றுக்கொள்கின்றாரா? என்று  கேள்விஎழுப்பினார். கருத்துரிமை பறிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை உபயோகப்படுத்தி பேசி பிரச்சனை உண்டாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்றார். இது ஏற்கத்தக்கதல்ல, எங்கள் தலைவர் பொறுப்பான  முதல்வர், கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தி, கட்டுப்பாட்டோடு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கின்றார்கள். 

சீமான் அவருடைய கட்சிக்கு இலங்கை தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி உலக அளவில் பல்வேறு வகையில் நன்கொடையாக பெற்று வருகின்றார். இலங்கையில் எப்படி ராஜபக்சேயை  எதிர்க்கின்றானரோ அதே போன்று தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்க வேண்டும் என்று காட்டி கொள்வதற்காக திமுகவையும், திமுக தலைவர்களையும் அவர் பேசி வருகின்றார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்.  அரசியல அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சிஇல்லாத ஒரு தலைவராக அவர் தெரிகின்றார். தமிழ் சமூகத்தை தவறான தகவல் மூலம் தவறாக வழிநடத்தி வருகின்றார் என்பதை கூறிக் கொள்கின்றேன். எங்கள் தலைவர் பொறுப்பான ஒரு முதலமைச்சர் ஆளுங்கட்சி, ஆகவே எங்கள் முதலமைச்சரின் கண் அசைவுக்கேற்ப எங்கள் கட்சி தோழர்கள், தொண்டர்கள் செயல்படுவார்கள்.

குற்றச் செயல்களில் இன்று நேற்று தொடர்ச்சியாக நடைபெற்று வருவது. 1967 க்கு முன்னர் இருந்து குற்றச்செயல்கள் நடந்து தான் வருகிறது. தொடர்ச்சியாக நடக்கிறது. கலைஞர் பொறுப்பேற்ற பின்னர் தான் சட்டம், ஒழுங்கு சரி இல்லை என்று கூறி தவறான கருத்துக்களை கூறுகின்றார்கள் என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழிVarun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..Rahul vs Modi : எகிறும் ராகுலின் கிராப்ஃ.. சரியும் மோடியின் பிம்பம்! இந்தியா டுடே சர்வே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!
மோடி, யோகியை புகழ்ந்த பெண்.. முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்.. உபியில் அதிர்ச்சி!
மோடி, யோகியை புகழ்ந்த பெண்.. முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்!
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Embed widget