மேலும் அறிய
Advertisement
‛ஈயத்தை கண்டு இளித்ததாம் பித்தளை’ திமுக ஆட்சியை தாக்கிய எச்.ராஜா!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை பூமாராங்போல திமுகவிற்கே திரும்பும் - என எச்.ராஜா தெரிவித்தார்.
"எங்களை அச்சுறுத்த ஜனநாயக விரோத நடவடிக்கையில் தி.மு.க ஈடுபடுகிறது. எப்படியாவது பொய் வழக்கு போட்டு எங்களை நசுக்க வேண்டும் என்று செயல்படுகிறார் ஸ்டாலின். நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி நாடுவோம். அனைத்தும் பொய் வழக்கு என்பது மக்களுக்கு தெரியும். அராஜக தி.மு.க அரசு எடுத்திருக்கும் வன்முறையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பு இருக்கும்" என ஓ.பன்னீர் செல்வம் கூறி சட்டமன்ற கூட்டத் தொடரை அ.தி.மு.க புறக்கணித்தது. அதே போல் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் செய்யப்படும் ரெய்டுக்கு அ.தி.மு.க பக்கம் கடும் எதிர்ப்பு இருந்துவருகிறது. கொடநாடு கொலை வழக்கு மறு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பெற்றது.
இந்நிலையில் 'அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு, பொய் வழக்கு போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் பூமாராங்போல தி.மு.கவிற்கே திரும்பும்' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா.....,"தி.மு.க 100 நாட்கள் ஆட்சி என்பது மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே, தி.மு.கவின் டி.என்.ஏ என்னவென்று 1967ஆம் ஆண்டு முதலே தெரியும். ஆட்சிக்கு வந்தால் (Neet) நீட் தேர்வு ரத்து, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு என கூறுகின்றனர். நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை என்கிற பெயரில் மஞ்சள் கடிதாசியை வெளியிட்டுள்ளார்.
ஈயத்தை கண்டு இளித்ததாம் பித்தளை என்பது போல தி.மு.க அரசு 90 நாளில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தி.மு.க அரசின் பட்ஜெட பொருளாதாரம் தெரிந்தவர் போட்ட பட்ஜெட்டாக தெரியவில்லை. 100 நாட்கள் தோல்வியை மறைக்க அனைத்து சாதி அர்ச்சகர் என கூறி மக்களை திசை திருப்புகின்றனர். தி.மு.க பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் போன்ற சண்டையை உருவாக்க முயல்கின்றது. லியோனி பொறுப்பேற்ற பின் பள்ளிக் கல்வித்துறை கிறிஸ்தவ அமைப்பாக மாறி விட்டது. அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாட்டு கோவில்களில் தங்கம் இருப்பு குறித்து பேசும்போது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. தமிழ்நாடு கோவில்களில் சொத்து வருவாய் 10 லட்சம் கோடி சுரண்டப்பட்டுள்ள தற்கு திராவிட அரசுகள் தான் காரணம்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு, பொய் வழக்கு போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் பூமாராங்போல தி.மு.கவிற்கே திரும்பும் எனவும், ஊழல் என்றால் தி.மு.க தான், திமுக என்றாலே அது ஊழல் தான் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion