மேலும் அறிய

Gayathri Raghuram: அண்ணாமலை ஆடியோ... காயத்ரி ரகுராம் வீடியோ... ட்ரெண்டாகும் #IStandWithAnnamalai !

‛‛தமிழ்நாட்டில் யாரும் செய்யாததை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மாவட்ட செயலாளரானால் உங்களுக்கு கீழே பத்து பேர் இருப்பான். 2026-ல் எம்.எல்.ஏ.வாக நிற்பீர்கள்’’ -காயத்ரி ரகுராம்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் உறுப்பினர் காயத்ரி ரகுராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘எங்கள் தலைவர் அண்ணாமலைஜி எங்களை சொந்த சகோதரி போல நடத்துபவர். வேண்டுமென்றே ஆடியோவை திரித்து வெளியிட்டுள்ளார்கள். தேசத்துக்குச் சேவை செய்வதே அவரது நோக்கம்’ என அவர் தனது வீடியோவில் பேசியுள்ளார். 

பா.ஜ.க. உறுப்பினர் கே.டி.ராகவன் பாலியல் சர்ச்சை வீடியோ விவகாரத்தில் அண்ணாமலைதான் வீடியோவை வெளியிடச் சொன்னதாக சர்ச்சை ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. ராகவன் வீடியோவை வெளியிட்டதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட  யூட்யூபர் இந்த ஆடியோவை வெளியிட்டிருந்தார். இதை அடுத்து அண்ணாமலைக்கு கட்சி மேலிடத்திலிருந்து அழுத்தம் அதிகரிக்கலாம் என்றும் அவர் தலைவர் பதவிக்கு ஆபத்து என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் வெளியானது.  இதற்கிடையே அண்ணாமலை தனக்கு தேசத்துக்குச் சேவை செய்வதுதான் நோக்கம் என்கிற வகையில் ட்வீட் செய்திருந்தார். இதற்கிடையேதான் அண்ணாமலைக்கு ஆதரவாக ட்விட்டரில் கட்சியினர் ட்வீட் செய்து வருகின்றனர். 


Gayathri Raghuram: அண்ணாமலை ஆடியோ... காயத்ரி ரகுராம் வீடியோ...  ட்ரெண்டாகும் #IStandWithAnnamalai !

முன்னதாக, தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளராகிய கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி அந்த கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த வீடியோவை வெளியிட்ட யூ டியூபர் அண்ணாமலையின் சம்மதத்துடனே இந்த வீடியோவை வெளியிட்டதாக இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் அண்ணாமலையுடன் தான் பேசுவது போன்று ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


அந்த ஆடியோவில் அண்ணாமலை பேசியிருப்பதாவது, “ நான் ஒரு வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கித் தருகிறேன். பெரும்பாலும் டெல்லியில் ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்கள் இதை அங்கே காட்ட வேண்டும். முக்கியமானவர்களிடம் இதைக் காட்ட வேண்டும். இதுபோன்ற மிக மோசமான நபகர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை புரிய வைப்போம்.


நாடு, கட்சி, தனிநபர்கள் போன்றவற்றை காப்பாற்ற வேண்டும் என்ற பரந்த நோக்கத்திற்காக இதைச் செய்ய வேண்டும். கட்சியைக்கூட விடுங்கள். உங்களுக்கு பா.ஜ.க. பிடிக்காமல் இருககலாம். ஆனால், நாடு மிக முக்கியம். இந்த வீடியோக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினால், உங்கள்  பிராண்ட் நிற்கும். ஆனால், 15 மிகப்பெரிய எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஏனென்றால், இவற்றை வெளியிடுவதன் மூலம் ஒரு மனிதனின் அரசியல் வாழ்வையே அறுத்து எறிகிறோம். 30-40 ஆண்டுகளாக அவர்கள் உருவாக்கிய அரசியல் வாழ்க்கையை அறுத்து எறிகிறோம். அவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். அப்படி செய்தால் அதில் உடனடியாக நீதி கிடைக்கும். எறும்பு புற்றில் மருந்தடிப்பதைப் போல. ஆனால், உங்களுக்கும் இதில் சங்கடம் வரக்கூடாது என நினைத்தால், ஆறு மாதம் காத்திருக்கலாம்.


இந்த வீடியோக்களை வெளியிட்டால் எனக்கு வேலை போய்விடும் என்று கண்டிப்பாக உங்களை வேலையை விட்டு தூக்கமாட்டார்கள். நானே சந்தித்து பேசினேன். எதுவும் கமலாலயத்தில் நடக்கவில்லையா? தலைவர்கள் தப்பு செய்யவில்லையா? என்ற கேட்டார்கள். அதை நான் சொல்லமுடியாது. அது என் வேலையில்லை என்றேன்.


நான் தலைவனான பிறகு கட்சித் தலைவர் அறையின் கதவை கண்ணாடி கதவாக மாற்றிவிட்டேன்.  இந்த அறைக்குள் என்னென்னவோ நடக்கிறது. இப்போது உள்ளே நுழையும் யாரும் தலைவரைப் பார்க்கலாம். நான் என் அறைக்கு எந்த பெண்ணையும் தனியாக நுழைய அனுமதிப்பதில்லை. குஷ்பு உள்பட யாராக இருந்தாலும் சரி. ஒரு சிறிய புரட்சியை செய்துள்ளேன்.


 நீங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள். அவர்கள் ஈவு இரக்கமின்றி இருப்பார்கள். ரொம்ப எக்ஸ்போஸ் ஆகிவிடாதீர்கள். எனக்கு தமிழ்நாட்டில் யாரும் ஆர்டர் போட முடியாது. அதை அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார். நான் தலைவராக இருக்கும்போது ஏதும் நடக்காது.


தமிழ்நாட்டில் யாரும் செய்யாததை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மாவட்ட செயலாளரானால் உங்களுக்கு கீழே பத்து பேர் இருப்பான். 2026-ல் எம்.எல்.ஏ.வாக நிற்பீர்கள். ஆனால், நாளை காலையே ஏதும் நடந்துவிடாது. 5 வருடத் திட்டமாக இது இருக்க வேண்டும். மாநில அளவில் பொறுப்புக் கொடுத்து விடுகிறேன். இலக்கியப் பிரிவு என்ற ஒன்றை உருவாக்கிவிடலாம். என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்கள். செய்யலாம். இதைவிட வேறு என்ன சொல்ல முடியும்.


பிரசாத்தின் விலகல் கடிதம் என் டேபிளிலில் இருக்கிறது. எப்போதோ அவரை தூக்கியாவிட்டது. என்னைப் பற்றி தமிழிசை மேடத்திடம் தப்பாக சொல்லி, கீழே விழுந்து கால் உடைந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பே ராஜினாமா வாங்கிவிட்டேன். இவ்வாறு அந்த ஆடியோவில் அண்ணாமலை பேசுவது போல உள்ளது. இந்த ஆடியோ குறித்து விரைவில் விளக்கம் அளிக்க உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget