EPS slams DMK : ”இல்லை.. இல்லை.. இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி!” சீறி எழுந்த எடப்பாடி
Edappadi Palanisamy : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கையில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

காரைக்குடியில் காவல் நிலையத்திலேயே பெண் எஸ்.ஐ தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பெண் எஸ்.ஐ:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ யாக பணியாற்றி வருபவர் பிரணிதா. இரவு காவல் நிலையத்தில் கோவில் நிலத்தில் கட்டுமானம் தொடர்பாக சர்ச்சைக்குறிய புகார் மனு தொடர்பாக விசாரனைக்கு வந்தவர்களுக்கு ஆதரவாக சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலர் வந்திருந்ததாக கூறப்படுகிறது.
பெண் எஸ்ஐயிடம் புகார் மனு தொடர்பாக கேட்ட போது நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள் நான் வேறு காவல் நிலையத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்படுள்ளேன் என்று கூறிய நிலையில் எஸ்.ஐ யிடம் விசிக மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் உள்ளிட்டோர் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பெண் எஸ்.ஐ என்று பாராமல் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. தகராறு செய்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண் எஸ்ஐ பிரணிதா காயமடைந்து மயங்கி காவல்நிலையத்தில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மீட்டு பெண் எஸ்.ஐ சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெண் எஸ்.ஐ பிரணிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பின்னர் அந்த நபர் செய்த காரியம்! வேலூரில் பரபரப்பு
எடப்பாடி கண்டனம்:
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
”யாருக்கும் பாதுக்காப்பில்லை”
குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பில்லை! பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை! மூதாட்டிகளுக்கு வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை! காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை! இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி! பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

