Eknath Shinde Party Symbol: ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவுக்கு சின்னம் ஒதுக்கீடு; என்ன சின்னம் தெரியுமா?
Eknath Shinde Party Symbol::ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு கட்சி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது
ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பாலாசாகேப் ”சிவசேனா” என்ற கட்சி பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், தற்போது இரண்டு வாள் மற்றும் கேடயம் கொண்ட சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
பிரச்னையின் பின்னணி:
சிவசேனா கட்சித் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், மகா விளாஸ் கூட்டணி முறிந்தது.
அதை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஷிண்டே முதலமைச்சரானதைத் தொடர்ந்து, முதன்முறையாக மக்கள் மன்றத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, நவம்பர் 3ஆம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் பாஜகவும், ஷிண்டே பிரிவினரும் மும்பை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான முர்ஜி படேலை இடைத்தேர்தலில் நிறுத்தியுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி மறைந்த லட்கேவின் மனைவி ருதுஜா லட்கேவை களமிறக்க வாய்ப்புள்ளது.
சின்னம் முடக்கம்:
இந்ந்லையில் இரு தரப்பும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை உரிமை கோரிய நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. அந்தேரி (கிழக்கு) தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இரு தரப்பு ஆதரவாளர்களும் வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இரண்டு தரப்பினருக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Uddhav Thackeray faction releases a poster with the new symbol and the new party's name.
— ANI (@ANI) October 10, 2022
Election Commission of India allotted 'ShivSena (Uddhav Balasaheb Thackeray)' as the party name to Udhhav faction and the flaming torch as their election symbol. pic.twitter.com/xikZKohR5V
புது சின்னங்கள் ஒதுக்கீடு:
இதையடுத்து, உத்தவ் தாக்கரேவுக்கு ”தீப சுடர்” சின்னத்தையும், ”சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே” என்ற கட்சி பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்-10) ஒதுக்கியது.
Election Commission of India allots the 'Two Swords & Shield symbol' to Eknath Shinde faction of Shiv Sena; they were allotted the name 'Balasahebanchi ShivSena' yesterday. pic.twitter.com/2Xi2C5TS4T
— ANI (@ANI) October 11, 2022
ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பாலாசாகேப் ”சிவசேனா” என்ற கட்சி பெயரை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்-10) ஒதுக்கியது.
இந்நிலையில், இன்று ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு, இரண்டு வாள் மற்றும் கேடயம் கொண்ட சின்னத்தை , இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது