முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் - காரணத்தை அடுக்கிய எடப்பாடி பழனிச்சாமி
திருவண்ணாமலையில் முதியோர்களுக்கு ஓய்வூதியத்தை தடையின்றி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை அதிமுக நடத்தும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் புதிய நீதியின் கட்சியின் நிறுவனத் தலைவர் எசி சண்முகம் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலை கட்டியுள்ளார் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக அதிமுகவன் இணை ஒருக்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து வருகை தந்தார்.
இவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்களுடன் காட்டாம்பூண்டி கிராமத்தில் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரை வரவேற்பு அளித்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் அங்கு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்;
அப்போது ஏழை எளிய ''அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வில், 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கியதால், ஏழை எளிய மாணவர்கள் பலர் மருத்துவம் படித்து வருகின்றனர். இதற்கு காரணம் அதிமுக தான் ஆனால் மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது திமுக அளித்த எந்த வாக்குறுதிகளும் திமுக நிறைவேற்றவில்லை என்றும் அதேபோல் கிராம புறங்களில் தரமான சாலையை அமைத்து கொடுத்தது அதிமுக அரசு. வேளாண்மை துறை செழிக்க வேண்டும் என்று, நிலத்தடி நீர் உயர வேண்டும் என்பதற்காக, குடிமராமத்து பணிகள் மூலமாக ஏரி, குளம், குட்டைகளை தூர் வாரப்பட்டது. தடுப்பணைகள் கட்டப்பட்டதால், மழைக் காலங்களில் நீரை தேக்கி, நிலத்தடி நீர் உயர்வுக்கு காரணமாக உள்ளது என்றார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் முதலில் ஆயிரம் ரூபாய், கரும்பு கொடுத்தோம். அடுத்தது ரூ.2,500 கொடுத்தோம். ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக அரசு கொள்ளை அடித்துள்ளது. மக்களுக்கு சரியான முறையில் பொங்கல் பரிசு வழங்கவில்லை. மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்றார். பல்வேறு துறைகளில் முறைகேடு நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்றார்கள். ஆனால் கொடுக்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடியில் மக்களை ஏமாற்றினர். நகை கடன் தள்ளுபடி என்று பொது மக்களை ஏமாற்றியது திமுக அரசு 35 லட்சம் ஏழை எளிய விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திய அரசு அதிமுக அரசு என்றார். அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாமல் ஏமாற்றியது திமுகதான். முதியோர் தொகை உயர்த்தப்படும் என்று சொன்ன வார்த்தையும் திமுக அரசு காப்பாற்றவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும் முதியோர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓய்வூதியத்தை தடையின்றி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை அதிமுக நடத்தும் என்றும், திமுக அரசு மக்களை ஏமாற்றி இரட்டைவேடம் போடும் ஒரே கட்சி திமுக கட்சி என்றார், தடையில்லா மின்சாரத்தை வழங்க என்னிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். கோரிக்கையை ஏற்று தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது ஆனால் தற்போது மின்சாரத்தை கூட முழுமையாக கொடுக்க முடியாத அரசாங்கம் திமுக அரசாங்கம் என்றும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்.