விசாரணையை முடக்கும் நோக்கத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
மத்திய குற்றப்பிரிவு வழக்கு நிலுவையில் இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்க முடியாது என்றும் அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமலாக்கத்துறை பதில் மனு:
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது மனுவிற்கு அமலாக்கத்துறை பதில்மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சல் செந்தில்பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு வழக்கு நிலுவையில் இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்க முடியாது என்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அமலாக்கத்துறை வாதிட்டது.
தொடரும் ஜாமின் மனு:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமினில் வெளிவர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அமலாக்கத்துறை அவரை ஜாமினில் வெளியில் விட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய மருத்துவ காரணங்களை மேற்கோள் காட்டியும் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால், உடல்நல காரணங்களுக்காக ஜாமின் அளிக்க முடியாது எனவும் நீதிமன்றம் அவரது மனுவை ஏற்கனவே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Rajya Sabha: 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம்
மேலும் படிக்க: MP Elections 2024: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்