மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அனைத்து நிர்வாகிகள் கூட்டம்... திடீரென தேதியை மாற்றிய துரைமுருகன்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 28 ம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24-ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இதனால், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்துக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் கட்சியின் முக்கிய கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் கட்சியின் உள்விவகாரங்கள், உட்கட்சி மோதல்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதன் நோக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: நம்மள பாத்து 135 கோடி பேர் சிரிக்கிறாங்க...நம்ம ஒன்னும் குழந்தைங்க இல்ல...எம்பிக்களை கடிந்துகொண்ட குடியரசு துணைத்தலைவர்..!