முருகன் மாநாடு , பக்தர்கள் ஏமாந்து விடாதீர்கள் - கி.வீரமணி ஆவேச பேச்சு
முருகன் மாநாடு வாக்குகளுக்காக நடத்தப்படுகிறது என இதுவரை நாங்கள் கூறி வந்தோம். தற்போது பாஜகவை சார்ந்தவர்களே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுப்பது போல் கூறியுள்ளனர். எனவே பக்தர்கள் ஏமாந்து விடாதீர்கள்

பழைய புத்தக கண்காட்சி தொடக்கம்
சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் இதுவரை பெரியார் நிறுவனங்கள் நடத்தி வரும் பதிப்பகங்களின் , 95 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வகை பழைய புத்தகங்களின் கண்காட்சியை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவின் போது திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தன்னுடைய சுயமரியாதை இயக்க பணியை தொடங்குவதற்கு அடித்தளமாக இருந்தது குடியரசு பத்திரிக்கை ஆகும் , அவருடைய பல்வேறு புரட்சிகளுக்கு அடித்தளமாக இருந்த புத்தகங்களுக்கு இன்று பெரியார் திடல் வளாகத்தில் அவருடைய புத்தகங்கள் காட்சியளிக்கும் வகையில் ஒரு காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் தடை செய்யப்பட்ட நூல்கள் காட்சியளிக்கப்படுகிறது , இந்தியாவில் முதல் என சொல்லக்கூடிய அறிவு புரட்சிகளை கொண்டாடுவதற்கு இன்று ஒரு முக்கியமான நாள் , தந்தை பெரியார் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார் ஆனால் அவருடைய புத்தகங்களுக்கு கால வரம்பு இல்லை அவை என்றும் வாழும் என்றைக்கும் புரட்சிகரமான ஆயுதங்களாக இருக்கும்.
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாடு பக்திக்காக நடைபெறவில்லை. முழுக்க முழுக்க வாக்குகளுக்காக நடத்தப்படுகிறது என இதுவரை நாங்கள் கூறி வந்தோம். தற்போது பாஜகவை சார்ந்தவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போல் கூறியுள்ளனர். எனவே பக்தர்கள் ஏமாந்து விடாதீர்கள். எங்களுக்கு வாக்குகள் தான் முக்கியம் பக்தர்கள் மனதில் இருக்கும் பக்தி முக்கியமில்லை என வெளிப்படையாக தெரிவித்த பாஜக தலைவருக்கு நன்றி.
மத்திய இணைய அமைச்சர் வேல்முருகன் தேர்தலில் திமுக தோற்று விடும் என்ற பயத்தின் காரணமாக தொகுதி மறுசீரமைப்பு ஆகிய தலைப்புகளை பேசி வருவதாக கூறிய கருத்து தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ;
எந்த முருகர் பற்றி பேசுகிறீர்கள் வேல்முருகனா அல்லது மத்தியில் இரண்டு முறை நீலகிரி நாடாளுமன்ற தொகுதியிலும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளிலும் தோல்வி பெற்ற முருகன் பற்றி பேசுகிறீர்களா ?
பயத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் என்றைக்கும் வெகு தூரம் வித்தியாசம் இருக்கும். திராவிட இயக்கத்தை கண்டு பயந்து ஓடி சென்றவர்களே அதிகம் இருப்பார்கள் , பயத்தையே விரட்டிய இயக்கம் திராவிட இயக்கம் , சுயமரியாதை இயக்கம் மற்றும் பெரியார் இயக்கங்கள் ஆகும்.
எங்கள் மடியில் கனமில்லை அதனால் எங்களுக்கு பயமில்லை , அனைத்து இடங்களுக்கும் சென்று பேரம் பேசுவது அரசியல் கிடையாது. எங்களுக்கு எப்போதும் இடம் பிரச்சனை இல்லை கொள்கை தான் முக்கியம்.
தமிழ்நாடு இரண்டு கூட்டணியில் திமுக தலைமையில் இருக்கும் கூட்டணி கொள்கைக்கான கூட்டணி , மற்றொரு கூட்டணி நிலைக்குமா ? நிலைக்காது என்று தெரியவில்லை. அந்த கூட்டணி இன்னும் உருவாகவில்லை , கருவில் இருந்து வரும் கூட்டணி எப்படி வெளிவரும் என்று தெரியவில்லை அதனால் இவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை.





















