மேலும் அறிய
Advertisement
”பழனிசாமி ஆட்சியை விட திமுக ஆட்சி மோசம்; அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்” - டி.டி.வி., தினகரன்!
”10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் காய்ந்தமாடு கம்பங்கொளையில் விழுந்தது போன்று செயல்படுகின்றனர்” என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை கோச்சடை பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ”இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்த முடிவு மருங்காபுரி மற்றும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மட்டும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். ஆளுங்கட்சி என்பதால் மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாக்களிப்பது இயற்கையாக நடக்கக் கூடியது. ஆனால் திமுக மீது 21 மாதங்களில் கடுமையான அதிருப்தி உள்ளது. பொதுத்தேர்தல் வரும்பொழுது எப்படி அதிருப்தி இருக்குமோ அந்த அளவிற்கு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதி குறித்து வார்த்தை ஜாலம்தான் ஸ்டாலின் பேசிவருகிறார். விடியல் அரசு என சொல்லிவிட்டு விடியாத அரசு விடியா மூஞ்சி ஆட்சியாக இருக்கிறது.
அனைத்திலும் ஊழல், பழனிச்சாமி ஆட்சியில் உள்ள முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் மக்கள் நம்பிய ஊழல்கள் அதையெல்லாம் தாண்டி கமிஷன் உயர்வாகி மோசமான ஆட்சியாக தற்போதைய திமுக ஆட்சி உள்ளது. 10 ஆண்டு ஆட்சியில் இல்லாததால் காய்ந்தமாடு கம்பங்கொளையில் விழுந்தது போன்று செயல்படுகின்றனர். இடைத்தேர்தலின் போது இதுவரை கேள்விப்படாத அளவிற்கு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். திமுக மந்திரிகள் இந்த இடைத்தேர்தலுக்காக ஒவ்வொரு தெருவிலும் அலைந்து திரிந்தனர். இடைத்தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசம் ஒன்றும் பெரியது இல்லை. இதே தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என்பது கடந்த காலத்தை பார்த்தாலே தெரியும். சட்டமன்றத் தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இடைத்தேர்தல் என்பது ஒரு இடைதேர்தல் மட்டும் தான்.
20 மாத ஆட்சியில் மக்கள் எந்த அளவிற்கு வேதனையில் உள்ளார்கள் என்பதை உளவுத்துறை மூலமாக முதலமைச்சருக்கு தெரியும் அதனால் தான் இடைத்தேர்தலில் தெருவுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் வேலை பார்த்தார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வாக்காளருக்கு 25 ஆயிரம் ரூபாய்பக்கும் அதிகமாக சேர்ந்திருக்கும். இதுவரை இல்லாத வகையில் இது போன்ற தவறான முன்மாதிரி தேர்தலாக நடந்திருக்கின்றது இதனை சமாளிப்பதற்காக வெற்றியை வாங்கிவிட்டு வெற்றி பெற்று விட்டோம் என்று சொல்கிறார்கள். ஆட்சி அதிகாரம் அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். பாகிஸ்தானிலா? தேர்தல் நடக்கிறது. இங்கதான நடைபெறுகிறது. அதனால் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த வெற்றி வாங்கப்பட்டது. மக்கள் வழங்கியது அல்ல. பழனிச்சாமி என்ற மனிதர் அவரை சேர்ந்த சிலர் ஆணவம், அகம்பாவம், ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் கிடைத்த பணத்தின் காரணமாக திமிர் ஆகியவற்றால் உச்சநீதிமன்றம் இரட்டை இலை வழங்கிவிட்டதால் மேற்கு மண்டலமே எங்களது கோட்டை என்று சொன்னார்கள். ஆனால் கலகலத்துபோகியுள்ளது.
எடப்பாடி தரப்பும் திமுகவிற்கு இணையாக பணமும் பொருட்செலவும் செய்தும் கூட வெற்றி பெற இயலவில்லை. இந்த அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். தனி சின்னத்தில் நின்று இருந்தால் பெரும் மோசமாகி இருக்கும். அம்மா ஐந்து ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். நான்கு ஆண்டுகளில் எடப்பாடியின் செயல்பாடு எவ்வளவு மோசமாக இருந்தது என்பதால் அவர்களை ஒதுக்கி வைத்த திமுக சிறப்பாக செயல்படும் என நம்பி வாக்களித்தார்கள். அம்மா இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது பொதுத்தேர்தலில் நின்று 28 இடங்களை பெற்றார். புதிய சின்னத்தில் நின்று 28 தொகுதிகளை வெற்றி பெற்றார். ஆனால் இவர்கள் இரட்டையிலிருந்து இவ்வளவு பாடுபட்டுள்ளார்கள். வருங்காலத்தில் அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக என்ற தீய சக்தி வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இதற்கு ஒரு சிலரின் சுயநலம் தடையாக இருக்கலாம். அந்த சுயநலம் உடைத்து எறியப்படும், பழனிச்சாமியுடைய தலைமைக்கு முதலமைச்சரான பிறகு அவர் டெல்லியின் ஆதரவு இருந்ததால் ஆட்சி அதிகாரம் இருந்ததாலும், அதன் காரணமாக பணம் செல்வாக்கால் ஆட்சியை காப்பாற்றினார். மத்தியில் ஆள்பவர்களின் உதவி இருந்ததால் பதவியில் இருந்தார். இது, ராஜதந்திரம் இல்லை. குப்பனோ சுப்பனோ இருந்தால் கூட அந்த ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும். பழனிச்சாமி சிலரை வசப்படுத்தி வைத்துள்ளார். கட்சியின் தலைமை பதவியை வகிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. தவறான பாதையில் தவறான மனிதராக இருக்கிறார் பழனிச்சாமி. எந்த அதிமுக துரோகம் இழைக்கப்பட்டதுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதே துரோகம் செய்தவர் தலைமையில் உள்ளது. இதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பை தரும் 2500 பேரை வசப்படுத்தி தொண்டர்களால் என் பின்னால் என சொல்கிறார். அவர் உண்மையான தலைவர் இல்லை. ஆளும் கட்சி பணபலம் மத்திய அரசு கூட இருந்தது போன்றவற்றால் வெற்றி கிடைத்தது. ஆனால் அம்மா அவர்கள் தனித்தே 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஈரோடு மாவட்டத்திலே ஐந்து ஏழு தொகுதியில் வெற்றி பெற்றார்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion