திமுக - பாஜக கூட்டணி ரகசியம் அம்பலம்; தடையின்றி RSS பேரணி - அதிரடி குற்றச்சாட்டு வைத்த சீமான்!
ஆட்சி சரியில்லை என்றால் அந்த ஆட்சியை அரியனையில் அமர்த்திய மக்கள்தான் குற்றவாளி - சீமான்

விழுப்புரம்: தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன கூட்டணி குறித்து பொறுத்திருங்கள், மாநாட்டில் அறிவிப்பதாகவும் ஜெயலலிதா இருந்தபோது நடைபெறாத ஆர்.எஸ்.எஸ் பேரணி திமுக அட்சியில் தடையின்றி பேரணி நடைபெறுகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மருத்துவமனையை அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது,
எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன பொறுத்திருந்து பாருங்கள், பாஜக சொல்லுகிறது திமுக வரகூடாது என்று அது ஓர் அணி அவங்க ஓர் அணி ஓர் அணி என்கிறார்கள் நாங்கள் மட்டும் தான் ஒரே அணி.
நெருப்பை நெருப்பை வைத்து அணைப்பது கடினம்
தீமைக்கு மாற்று தீமை இல்லை, நெருப்பை நெருப்பை வைத்து அணைப்பது கடினம் நீரை வைத்து அணைக்க வேண்டும், மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்கள் இந்திய கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகிறார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் தேவையை நிறைவேற்றி இருந்தால் அவர்கள் வர வேண்டிய தேவை இல்லை காவல் துறை இருக்கும் போது ஏன் சி பி ஐ விசாரனை கேட்கும் போது மத்தியில் உள்ள சி பி ஐ விசாரிக்கும் போது நீதியை நிலைநாட்டும் என அரசே கூறுவது ஏன் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறுவது கர்நாடகாவில் பாஜகவும், காங்கிரஸ்தான், முல்லைபெரியாறு, தமிழின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சிகள் தான் நிற்பார்களாக அல்லது திராவிட கட்சிகள் தான் நிற்பார்களா என கேள்வி எழுப்பினார்.
நெய்வேலியில் நிலக்கரி 25 ஆயிரம் ஏக்கர் விழுக்காடு எடுக்கபோகிறது அவர்கள் மன்னார்குடி வரை தோண்டி செல்வார்கள், மீத்தேன் எடுத்த இடத்தில், நிலக்கரி எடுத்த இடத்தில் மீண்டும் என் மக்களை குடியேற்ற முடியாது அதைப்பற்றி திராவிட கட்சிகளுக்கு கவலை இல்லை என கூறினார். இந்தியை திணித்தது யார், கல்வி மாநில உரிமை, மருத்துவத்தை பொதுப்பட்டியலில் கொண்டு சென்றது யார், நீட் திணித்தது யார் டி.என்.பி.எஸ்.சி தேர்வானையத்தில் யார் வேண்டுமானாலும் தேர்வு எழுத அனுமதித்தது யார், பத்தாயிரம் ஏக்கர் டால்மியாவிற்கு இடம் கொடுத்தது யார் என கேள்வி பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் கொடுத்தது அதிமுக அதில் கட்டியே தீருவோம் என கூறுவது திமுக பாஜக தான் என குற்றஞ்சாட்டினார்.
ஜெயலலிதா இருந்தபோது நடைபெறாத ஆர்.எஸ்.எஸ் பேரணி திமுக ஆட்சியில் தடையின்றி நடக்கிறது
பாஜகவை எதிர்க்கிறோம் என நாடகம் போடுகிறார்கள் ஜெயலலிதா இருந்த போது நடைபெறாத ஆர்.எஸ்.எஸ் பேரணி திமுக அட்சியில் தடையின்றி பேரணி நடைபெறுகிறது. இந்திய ஒற்றுமைக்காக போராடும் காங்கிரசும், பாஜகவும் கர்நாடாக நீர் தராத போது இந்திய இறையாண்மை ஒருமைப்பாடு இங்கு காக்கப்படுகிறதா தண்ணீர் என்று கேட்கும் போது ஒருசொட்டு தண்ணீர் கொடுக்காத அதிகாரம் யார் கொடுத்தா என்றும் அவன் அவன் வளம் அவனுக்கு என்று கூறும்போது என் நாட்டின் வளம் மற்றவர்களுக்கா என தெரிவித்தார்.
என்னுடைய மொழி சிதைஞ்சி போச்சு , முருகன், சிவன் பெருமாள் கோவிலில் தமிழில் வழிபாடு இல்லை, தமிழில் பாசுரத்தை பாடிய ஆண்டாள் கோவிலில் தமிழிலில் பாடுவதில்லை, தமிழ்நாடு தேர்வானையத்தில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிவிட்டு வெளியில் நிற்கிறார்கள், பீகார், கர்நாடகாவில் தமிழில் தேர்வு எழுத முடியுமா, புதுமைப்பெண் தமிழ்மகன் என்ற திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது வேலை வாய்ப்பு பெருக்க என்ன திட்டம் உள்ளது 24 ஆயிரம் கோடி இத்திட்டத்தில் செலவிடப்படுவதாக கூறினார்.
திமுக மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது
ஆட்சியாளர்கள் கடன் வாங்கி செலவிடப்படுவதால் வளர்ச்சி இருக்கிறதா, போக்குவரத்து ஒழுங்கா இருந்தா ஓலா ஹீபர் ஏன் வருகிறது. மீன் பிடிக்கிற உரிமை இழந்துள்ளார்கள், 870 மீனவரக்ள் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்கள் இதனை பற்றி எவரும் கவலை பட மாட்டார்கள், எதற்காக இந்த பாஜக என்னுடையை சாமி எப்படி கும்மிட தனக்கு சொல்லி தருகிறீர்களா, பூமி தாய் மலையை உடைத்தால் பாலைவனமாகிவிடும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை என சாடினார். அதிமுக நேரிடையாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளார்கள் திமுக மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் கூட்டணி வைக்காத பாஜக கருணாநிதி நாணயம் வெளியிட வருகிறார்.
ஜெயலலிதா கூட்டணி வைத்த போது வரவில்லை மூன்று முறை நிதி ஆயோக் கூட்டதிற்கு செல்லாத ஸ்டாலின் அமலாக்கதுறை சோதனை வருகிறது என்றவுடன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதாக தெரிவித்தார். தான் இருக்கிற வரை பாஜக தமிழகத்தில் வராது என்று கூறுகிறேன் அதுபோல் திமுக கூற வேண்டும் ஆனால் அப்படி கூறுவதில்லை, இல்லம் தேடி கல்வி வீடு தேடி அரசு, தமிழகத்தில் அரசு தன் அதிகாரத்தை தன் அரசின் பணத்தை திமுக தலைவரின் சிலை வைக்க செலவழிக்கிறது.
ஆட்சி சரியில்லை என்றால் அந்த ஆட்சியை அரியனையில் அமர்த்திய மக்கள் தான் குற்றவாளி, தமிழகத்தில் பெரிய கூட்டணி தன்னோடது. முடிவை மாநாட்டில் அறிவிப்பேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மரங்களின் மாநாடு , தண்ணீருக்கு மாநாடு நடத்துவோம் தனித்து போட்டியிடவில்லை 8 கோடி மக்களுக்காக அவர்களுக்கு மத்தியில் போட்டியிடுவேன் சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் தேர்தலுக்கு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறினார்.
திருவண்ணாமலை ஆந்திராவின் ஒரு மாவட்டமாக மாறுகிறது
தமிழக முதல்வருக்கு மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் பூரண நலம் பெற்று திரும்புவார் வருவார் வாழ்த்துக்கள். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் என்று போட்டால் கூட மனம் ஆறிவிடும் அருணாச்சலம் என்கிறார்கள். அதனை தடுக்க வேலை செய்து வருகிறேன் ஆந்திராவின் ஒரு மாவட்டமாக தடுக்க வேலை செய்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.





















