Congress: இதுதான் ப்ளான்! காய் நகர்த்தும் காங்! புதிய திட்டம்.. புதிய குழு; கூட்டத்தில் நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 3 நாள்கள் நவ சங்கல்ப் சிந்தன் சிவிர் என்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 3 நாள்கள் நவ சங்கல்ப் சிந்தன் சிவிர் என்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் வெற்றிக்கான பல்வேறு திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், கட்சியின் அனைத்து மட்டங்களிலும் சுமார் 50 சதவிகிதம் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இடம் தருவது முதலான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் திட்டத்தோடு, காங்கிரஸ் தலைவர் கே.ராஜு இந்தத் திட்டம் மூலம் சமூக நீதி உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சிக்குள் சமூக நீதி மற்றும் முன்னேற்றம் என்ற குழுவை உருவாக்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
`நவ சங்கல்ப் சிந்தன் சிவிர்’ கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகளுள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்..
சமூக நீதிக்கான குழுவின் முடிவுகள் காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஒப்புதலுக்குக் காத்திருப்பதாக ராஜு கூறியுள்ளார். மேலும், இந்தக் குழுவின் மூலமாக காங்கிரஸ் தலைவருக்குச் சமூக நீதி ஆலோசனைக் குழுவை உருவாக்குவது, இந்தக் குழு முக்கிய விவகாரங்களை ஆய்வு செய்து, காங்கிரஸ் தலைவருக்குப் பரிந்துரைகள் வழங்குவது முதலான பணிகளை மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தன் ஆலோசனையாக அனைத்து தலைமுறைகளையும், வயதுடையோரையும் உள்ளடக்கிய கட்சித் தலைவர்களின் கூட்டு முடிவுகள் பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அவர் கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியைப் பலப்படுத்துவதற்காகவும், மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவும் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவதோடு, காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தி, கட்சியின் மதிப்பை மீட்டெடுக்க மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சித் தலைவர்கள் அனைவருமே மக்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமரச் செய்யும் விதமாக பணியாற்ற வேண்டும் எனவும், புதிய கருத்துகள், புதிய வழியிலான மக்கள் தொடர்பு, உள்கட்சித் தொடர்பு ஆகியவற்றின் மூலமாக கட்சியைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நவ சங்கல்ப் சிந்தன் சிவிர் என்ற ஆலோசனைக் கூட்டம் முழுவதுமாக பயனுள்ளதாகவும், பல்வேறு விளைவுகளை ஈட்டித் தருவதாக இருந்தாலும், கட்சியின் வாக்குறுதிகளுக்கான திட்டங்களை உருவாக்குவது இதன் நோக்கம் அல்ல எனவும், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலமாக புதிய சிந்தனைகள், மாற்றங்கள் ஆகியவை உருவாகி, அடுத்தடுத்த காலங்களில் கட்சி எதிர்கொள்ளும் சவால்களைத் தாண்டி முன்னேறும் வகையில் இருக்க வேண்டும் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.