மேலும் அறிய

சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி

தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ஜ.க. சார்பில் முதன் முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வேலாயுதம் காலமானார். 

பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ.

தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வளர்வதற்கு முக்கிய பங்காற்றியவர் வேலாயுதம். கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர் இவர். கன்னியாகுமரி மாவட்டம் பதம்நாபபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய வேலாயுதம் 27,443 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

உயிரிழப்பு:

அதன்பிறகு, தமிழ்நாட்டில் பா.ஜ.க. கட்சியின் முக்கிய நபராக இவர் விளங்கினார். அதோடு பா.ஜ.க.வின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். அதன் பிறகு வந்த 2001, 2006 -ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்று (08.05.2024) காலமானார். இவருக்கு வயது 73. இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கையெழுத்து இயத்தை நடத்தியிருக்கிறார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழிசை செளந்தரராஜன் இரங்கல்:

இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, ”தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா C.வேலாயுதம்  காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி !” என்று  குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், சமூக சேவகருமான C.வேலாயுதம் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். தமிழக பாரதிய ஜனதா கட்சி வரலாற்றில் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற மாபெரும் பெருமையை பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து 1996 ல் பெற்றவர் அவர். கட்சிக்கும் , சமூகத்திற்கும் அவர் அளித்த கடமைப்பண்பும், அர்ப்பணிக்கும் குணமும் காலம் கடந்து நினைவேற்கப்படும். அன்னாரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த மற்றனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், இந்த துயர தருணத்தைக் கடந்த்தேற எல்லா வலிமையும் பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி..” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது இறுதிசடங்கு நாளை (09.05.2024) காலை 10.30 மணி நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Embed widget