தி.மு.க.வில் உள்ள ஒருவரின் சொத்திலே தமிழ்நாட்டிற்கு பட்ஜெட் போடலாம் - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம்
சீர்காழியில் நடைபெற்ற அதிமுக 52 வது ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிமுகவின் 52 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் பேசியதாவது, தி.மு.க எம்.பி.ஜெகத்ரட்சகனின் சொத்து பட்டியலை வாசித்தார். அதனைத் தொடர்ந்து இவர்களுடைய சொத்து கணக்கெடுக்கப்பட்டது மட்டும் தோராயமாக 66 ஆயிரம் கோடி உள்ளது.
பிணவறையில் பணம்:
இவரை விட பெரிய ஆட்களும் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர். திமுகவில் உள்ளவர்களின் ஒருவரின் சொத்தை எடுத்தால் கூட தமிழகத்திற்கு பட்ஜெட்டை போட்டு விடலாம் என விமர்சித்தார். இப்படிப்பட்டவர்களை தேர்தலில் சமாளிப்பது அவளது எளிதான காரியம் அல்ல, நம்ம ஊரில் பிணங்களை கொண்டு சென்று பிரிசரில் வைப்பதற்கு இடமில்லை. ஆனால், ஜெகத்ரட்சகன் பணத்தைக் கொண்டு போயி பினவறைகளில் பதுக்கி வைத்துள்ளார்.
அரசியலுக்கு வரும் முன்பே சொத்து:
நம் வீடுகளில் சாவுக்கு சென்று வந்தால் கூட வீட்டுக்குள் விடமாட்டார்கள் ஆனால் இவர் பினவறையில் தான் லட்சுமியே கொண்டு வைத்துள்ளார். அவரிடம் தான் பணம் குவிந்து உள்ளது என்றார். மேலும், அண்ணாமலை வெளியிட்ட திமுக அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் சொத்து பட்டியலை வாசித்தார். இவர்கள் எல்லாம் இப்படி கோடிகளை வைத்துக்கொண்டு
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 56 கோடி ரூபாய் சொத்தை வைத்திருப்பதாக வழக்கு போட்டார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதிமுகவில் சேர்வதற்கு முன்பாகவே கோபாலபுரத்தில் பங்களா கட்டி வாழ்ந்தவர். அப்பொழுதே ஹைதராபாத் திராட்சை தோட்டத்திற்கு உரிமையாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அவர்தான் 56 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு போட்டீர்கள், அவரின் இறப்பிற்கு நீங்கள் தான் காரணம்.
காவிரி தண்ணீர்:
அந்த வழக்கு சென்னையில் நடந்தால் தவறாகிவிடும் என்று கர்நாடகத்திற்கு அந்த வழக்கை மாற்றினீர்கள். அன்று காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு அம்மாவின் மீது மிக ஆத்திரத்தில் இருந்தனர். அங்கு வழக்கை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை தெரிந்தே மாற்றினீர்கள். ஜூன் 12 தண்ணீரைத் திறந்தால் ஏதோ சாதனை என்பது போல் திறந்து விட்டு விட்டார்கள்.
மாநில மத்திய வானிலை நிபுணர்களை கலந்து யோசிக்காமல் தண்ணீரை திறந்து விட்டார்கள். பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அது கடைமடை வரை வந்து சேரவே இல்லை. 20,000 கன அடி திறந்தால் மட்டுமே கடைப்பிடி பகுதிக்கு முழுவதுமாக தண்ணீர் வந்து சேரும். அப்படிப்பட்ட சூழலில் ஒருபோக சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.
அதிமுக ஆட்சியில் குருவை மற்றும் சம்பா பயிர்களுக்கு 100 சதவீதம் பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு குருவை காண காப்பீடு திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள். இல்லையென்றால் தற்போதைய குருவை சாகுபடிக்கு ஒவ்வொரு விவசாயிக்கும் 33 ஆயிரத்து 800 ரூபாய் கிடைத்திருக்கும். அதனை தடுத்த திராவிட முன்னேற்றக் கழக குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார். காவிரியில் கர்நாடக அரசு தண்ணீரை வழங்க வேண்டும் என ஒரு முறை கூட இவர்கள் கேட்கவில்லை. சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீரை திறக்க வேண்டும் என்ற வார்த்தையை சேர்க்கச் சொல்லி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டபோது அதனை அவர்கள் ஏற்கவில்லை.
கொலைகள் அதிகரிப்பு:
38 எம்பிக்கள் இருக்கிறார்கள் தண்ணீர் வேண்டும் என்று ஒரு முறை கூட அவர்களால் கேட்க முடியவில்லை. திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலேயே நாம் தண்ணீர் கேட்பது போல் நடிக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் நமக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு அளிப்பார்கள் என்று பேசி வருகிறார்கள். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இல்லை, தலைமை ஆசிரியர் இல்லை. இந்த நிலையில் மக்களை தேடி கல்வி என்கிறார்கள், பள்ளிக்கூடத்திலே ஆசிரியர்கள் இல்லாத போது இல்லம் தேடி கல்வி எப்படி நடைபெறும். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை.
ஆனால், மக்களை தேடி மருத்துவம் என்கிறார்கள். முன்பெல்லாம் எங்காவது ஒரு கொலை நடக்கும் ஆனால் இப்பொழுது எல்லாம் நான்கு, மூன்று, இரண்டு என ஜோடி ஜோடியாக கொலைகள் நடக்கிறது. போதைப் பொருள்களின் சந்தையாக தமிழகம் மாறி வருகிறது. கஞ்சா எங்கு பார்த்தாலும் வழிந்து ஓடுகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் நாங்கள் வேலை பார்க்க வேண்டும் என்றால் இனி எங்களுக்கு துப்பாக்கி கொடுங்கள் என்று கேட்கும் நிலைக்கு இங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது எனவும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.