மேலும் அறிய

பாஜகவினருக்கும் அண்ணாமலைக்கும் தமிழின் மீது அக்கறை இல்லை - அமைச்சர் பொன்முடி

சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தி விவாதிக்க அண்ணாமலை தயார் என்றால் நானும் தயார் - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: மும்மொழிக்கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம் என நேரிடையாக விவாதிக்க சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தி விவாதிக்க அண்ணாமலை தயார் என்றால் நானும் தயாராக உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி திமுக எம் எல் ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முன்னாள் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளதால் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கி, நிலவள வங்கிகளில் கழக தோழர்கள் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என 5  தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி,  மும்மொழிக்கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம் என நேரிடையாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என நான் கேட்டிருந்ததற்கு  அதற்கு அவர் தயார் என கூறியுள்ளார்.

அப்படி விவாதிக்க தயார் என்றால் சென்னையில் எந்த இடத்தில் பொதுக்கூட்டம் போட்டு  விவாதிக்கலாம் நானும் தயாராக  உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர்  ஊட்டியில் துணைவேந்தர்களுக்கு எல்லாம் கூட்டம் 5 ஆம் தேதி புதிய கல்வி கொள்ளை தொடர்பாக நடைபெற உள்ளதாக வேந்தர் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த புதிய கல்வி கொள்கை தொடர்பாக தற்போது கூட்டம் நடத்தபட வேண்டிய அவசியமா என கேள்வி எழுப்பி உள்ளார். அரசுக்கே தெரியாமல் வேந்தர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாகவும், அரசியலில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு தமிழ் வழி பாடபிரிவுகள் நீக்குவதாக வெளியான அறிவிப்பு திமுக சட்டமன்ற உறுப்பினரும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பரந்தாமனுக்கு தெரியாமலையே இது நடந்திருக்க கூடும் என அண்ணாமலை குற்றஞ்சாட்டினயுள்ளார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியான போது  அவர் சிண்டிகேட் மெம்பராகவே இல்லை அவருக்கு எப்படி தெரியும் என அமைச்சர் கேள்வி எழுப்பினர்.  தமிழ் மொழி வளர்ச்சி மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் ஏன் ஆளுநரை சந்தித்து  இணை வேந்தர்களுக்கு அறிவிப்பு வழங்கவில்லை என கேட்க வேண்டும் என்றும் பாஜக அறிக்கை விட்டதால் தான் அண்ணா பல்கைகழகத்தில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கபடாது என அறிவிப்பு வெளிவந்ததாக கூறுவது ஏற்க முடியாது தெளிவாக தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும் எனவும் எந்த மொழியையும் படிக்க நாங்கள் எதிர்ப்பாக இல்லை ஆனால் இரு மொழிக்கொள்கை தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என கூறினார்.

தேர்வு எழுதுகிற போது மாணவர்களின் சங்கடங்களை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் மும்மொழிக்கொள்கையில் சான்ஸ்கிரிட், இந்தி மொழியில் படிப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கபடுமென குறிப்பிடுகிறார்கள். ஆனால் தமிழுக்கு அதில் சலுகைகள் வழங்க படவில்லை தமிழ் வளர்ச்சிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழக முதல்வர் செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக ஆகலாம் என கூறியது திராவிட மாடல் ஆட்சி தான் ஆனால் இங்கு  இந்தியை புகுத்த முற்படுகிறார்கள் என்றும்  தமிழ் மொழிக்கு எதிராக அண்ணாமலை பேசுவதாகவும் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் ஆங்கிலம் கட்டாயம், தமிழ் மொழி விருப்ப பாடம் என வைத்துள்ளார்கள் அதில் தமிழ் மொழி கட்டாயம் என மத்திய அரசு  கொண்டு வரவில்லை அதனை அவர்கள் செய்யவேண்டும் என தெரிவித்தார். பாஜகவினருக்கும் அண்ணாமலைக்கும் தமிழின் மீது அக்கறை இல்லை . எதுவானாலும் அரசியல் செய்ய அண்ணாமலை நினைப்பதாகவும் திமுக இரண்டாவது பைல்ஸ் வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளதற்கு அவர் எத வேண்டுமானாலும் வெளியிடட்டும் என கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Embed widget