மேலும் அறிய

பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவு போன்றது - எச்.ராஜா

பாஜக, அதிமுக கூட்டணி என்பது கணவன், மனைவி உறவு போன்றது தினமும் ஐலவ்யூ  என கூற முடியுமா என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறையில் விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன் இல்லத் திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டார். அதனைத் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ஹிந்து தர்மத்துக்கு தொண்டுதொட்டு வழங்கிவரும் பேர் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது நிலையானது. தாய், சகோதரி, மனைவி ஆகிய உறவுகள் நிலையானது. இதை எப்படி மாற்ற முடியும். திராவிடர்கள் அடிமுட்டாள்கள் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிறது. 

பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவு போன்றது - எச்.ராஜா

சனாதன தர்மம் 15000 ஆண்டுகளுக்கு முந்தையது என ஜெர்மானிய ஆய்வாளர் மேக்ஸ்மூல் தெரிவித்துள்ளார். வள்ளுவர் சொன்னதைத் தான் உதயநிதி சொல்லியிருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். செய்யும் தொழில் அடிப்படையில் வேற்றுமை இல்லை என்பதை செய்தொழில் வேற்றுமை யான் என வள்ளுவரும், கண்ணபிரான் செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் 4 வர்ணங்களை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளனர். 

BJP ON Udhayanidhi: பாஜக அடுத்த அதிரடி.. உதயநிதிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ஆளுநர் ரவி என்ன செய்ய போகிறார்?

பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவு போன்றது - எச்.ராஜா

பகவத்கீதையில் சொன்ன விஷயம் எதையும் வள்ளுவர் விடவில்லை. வைரமுத்து படிப்பறிவில்லாதவர். இவருக்கு தெரிந்ததையெல்லாம் பாடகி சின்மயி மீ2வில் கூறிவிட்டார். வைரமுத்து ஆண்டாள் குறித்து தினமணி நாளிதழில் அருவெருக்கத்தக்க வார்த்தையில் பேசிய பண்பற்ற நபர். சனாதன இந்து தர்மத்தை இழிவுபடுத்துகிற கும்பல் வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும். இதனை பாஜக மட்டும் சொல்லவில்லை. ஆந்திர முதல்வர், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சிவசேனா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

ABP EXCLUSIVE: "பிளவுபட்ட உலகில் தனித்துவமாக நிலையில் இருக்கிறோம்" : டெல்லி ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

இதேபோன்ற சந்தர்ப்பவாதிகள் கூட்டணி சேர்ந்தாலும் உருப்படாது. பாஜகவினர், இந்து அமைப்பினர் அனைவரும் அனைத்து காவல் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் மனு அளிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் இது தேர்தல் நேரம் என்பதால் 8 மாதங்கள் ஏதும் பேசாமல் இருந்திருக்க வேண்டும். மலேரியா, டெங்கு போன்று அழித்துவிடுவேன் என்று இந்துவை இனப்படுகொலை செய்வேன் என அவர் சொன்னதை வீடுவீடாக பிரச்சாரம் செய்வோம். அழிக்கப்பட வேண்டிய கும்பல் இந்த திராவிட இயக்கங்கள். உதயநிதியின் படம் சாமியாரின் கைகளுக்கு எப்படி சென்றது. நீங்கள் என்ன மார்பிங் செய்தீர்களோ யாருக்குத் தெரியும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவரப்போகிறோம் என பாரத பிரமரோ, அல்லது வேறு யாருமோ தற்போது தெரிவிக்கவில்லை. 

பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவு போன்றது - எச்.ராஜா

TN CM MK Stalin to Visit Delhi : ‘சனாதன சர்ச்சை – திடீரென டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ காரணம் என்ன? Exclusive தகவல்கள்..!

பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவு போன்றது. அதனை தினமும் கூறத் தேவையில்லை. 19 ஆண்டுகளாக குடியிருந்த வீட்டுக்கு வாடகையே கொடுக்காத பிராடு சீமான் என்று அவர் கூறினார். பத்திகையாளர் சந்திப்பு எச்.ராஜா பேசிக்கொண்டு இருக்கையில்  திடீரென மின்சாரம்  தடைபட்டது. இதில் திமுக சதி ஏதேனும் உள்ளதா? என நகைச்சுவை கேள்வி எழுப்பி பேச்சை  தொடர்ந்தார். இந்நிகழ்வில் போது, பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Embed widget