Bihar Election 2025: முடிவுக்கு வரும் நிதிஷ் சாம்ராஜ்யம்..முதல்வராகும் தேஜஸ்வி.. சிராக்-பிரசாந்த் கிஷோர் கூட்டணி?
சிராக் பஸ்வான், பிரஷாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்தால் அது நிதிஷ்குமாருக்கு அரசியலில் பேரிடியாக அமையும், மேலும் பிரஷாந்த் கிஷோர் முதல்வராக வாய்ப்பு இது உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முடிவுக்கு வரும் நிதிஷ்குமார் சாம்ராஜ்யம்.. சிராக் பஸ்வான் அதிரடி வியூகம்.. பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைக்க தூது விட்டுள்ளது பீகார் அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல்:
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது மற்றும் நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
பீகாரில் தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது, அதாவது நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரு அணியாகவும் மற்றும் பிரசாந்த் கிஷோர் தனித்தும் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் ஆளும் தரப்பு கூட்டணியில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமார், சிராக் பஸ்வான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. மத்தியில் ஆளும் பாஜக இருவரையும் சமாதனம் செய்து தங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணியில் தக்க வைத்துவந்தது.
ஆனால் இந்த முறை இருவருக்கும் இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் மீண்டும் மோதல் வெடித்து உள்ளதால் என்டிஏ கூட்டணி உடைய வாய்ப்பு உருவாகியிள்ளது.பீகாரில் 243 சட்டமன்ற தொகுதி உள்ளது. அதில் ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் வெற்றிப்பெற வேண்டும்.
போர்கொடி தூக்கிய சிராக் பஸ்வான்
இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணில் நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 107 தொகுதியிலும், பாஜக 105 தொகுதியிலும் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது மீதமுள்ள 31 தொகுதியில் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவை இடையே பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்க்கு சிராக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தங்களுக்கு குறைந்தது 40 தொகுதிகள் வேண்டும் என்று போர்கொடி தூக்கியுள்ளார்.
நிதிஷ் அப்செட்:
தங்களது வலிமைக்கு ஏற்றவாரு தொகுதிகள் தர வில்லை என்றால் என்டிஏ-வை விட்டு விலக தயார் என்று மூத்த தலைவர்கள் கருத்து. மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் பிரசாந்த் கிஷோருடன் கூட கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரே போடாக போட்டுள்ளனர்.மேலும் அரசியலில் நிரந்தர நண்பணும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை பஞ்ச் டயலாக் பேசி வருகின்றனர். இதனால் நிதிஷ்குமார் அப்செட்டாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் கேட்ட தொகுதி கிடைக்காததாலும் மேலும் தனது தந்தை பஸ்வான் மறைவுக்கு பிறகு தங்களது லோக் ஜனசக்தி கட்சியை(ராம் விலாஸ்) குறைத்து மதிப்பிடுகிறார்கள் என எண்ணிய சிராக் பஸ்வான் கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துப்போட்டியிட்டார் .
அந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிட்ட 110 தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 133 தொகுதியில் நிதிஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை எதிர்த்து களம் கண்டார் சிராக். ஆனால் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றார். தேர்தலுக்கு பிறகு தனது சொந்த சித்தப்பா பசுபதி குமார் மூலம் கட்சியை உடைக்க நிதிஷ்குமார் திட்டம் தீட்டியதாக பகீர் கிளப்பினார் சிராக். அதேபோல் அவரது சித்தப்பாவும் மற்ற 4 எம்.பி.க்களும் சிராக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் லோக் ஜனசக்தி கட்சி இரண்டாக உடைந்தது. 2021-ல் லோக் ஜனசக்தி கட்சி ராம் விலாஸ் என்ற புதிய கட்சியை உருவாகினார் சிராக் பஸ்வான் மற்றும் அவரது சித்தப்பா ராஷ்ட்ரிய லோக் சமதா என்ற புதிய கட்சியை உருவாக்கினார். இவர்கள் இருவரும் தற்போது பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 5 தொகுதியில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது சிராக் தலைமையிலான லோக் ஜனசக்தி .இதனால் மூலம் மோடி தலைமையிலான 3.0 அரசாங்கத்தில் மத்திய கேபினட் அமைச்சரானார் சிராக் பஸ்வான்.
நிதிஷ்குமாரின் கடைசி தேர்தல்:
நிதிஷ்குமார் வயது மூப்பு காரணமாக அவரால் தீவிரமாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை, இதுவே அவருக்கு கடைசி தேர்தல் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேபோல வரும் காலத்தில் பிரசாந்த் கிஷோர் பீகார் அரசியலில் மிகப்பெரிய தலைவராக உருவெடுப்பார் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.
இதனை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கருத்து கணிப்பில் தேஜஸ்வி யாதவ் முதல் இடத்திலும், பிரஷாந்த் கிஷோர் இரண்டாம் இடமும் பிடித்தனர் அதில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் நிதிஷ்குமார். இது பீகார் அரசியலில் கூர்ந்து கவணிக்கப்படுகிறது.
பிரஷாந்த் கிஷோருடன் கூட்டணி?
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சிராக் பஸ்வான், பிரஷாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்தால் அது நிதிஷ்குமாருக்கு அரசியலில் பேரிடியாக அமையும், மேலும் வரும் காலங்களில் பிரஷாந்த் கிஷோர் முதல்வராக வாய்ப்பு இது உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதன்மூலம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி பீகாரில் ஆட்சி அமைக்க வழிவக்கும் என நிதிஷ்குமார் தரப்பு புலம்புகின்றனர்.
இதுபற்றி பாஜக தரப்பில் கூறுகையில் சிராக் எங்கள் கூட்டணியிலே தொடர்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.





















