மேலும் அறிய

’அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிட ரெடி’... பெங்களூர் புகழேந்தி பேட்டி...!

திருச்சியில் நடைபெறும் ஓபிஎஸ் தலைமையிலான மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி, சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

சேலம் மாநகர காந்தி மைதானம் தனியார் கூட்ட அரங்கில் ஓபிஎஸ் அணியின் சார்பாக முப்பெரும் விழா மாநாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைக்கும் விழா நடைபெற்றது. இதில் பெங்களூர் புகழேந்தி கலந்துகொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெங்களூர் புகழேந்தி, பாஜக தலைவர் அண்ணாமலையின் மீது எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அளவுக்கு கோபம் வருகிறது. கொள்ளையடித்தவர்களை விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியது என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் என்பவர் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் மீது ஊழல் செய்ததாக புகார் கொடுத்து 7ஆண்டுகள் ஆகிறது. இந்த ஊழலில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் மாட்டிக்கொண்டுள்ளனர். காமராஜ் மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். திமுக ஆட்சிக்கு முன்பாக அனைவரையும் சிறைக்கு கொண்டுசெல்வேன் என்று முதல்வர் கூறியிருந்தார். தற்போது ஏன் இந்த மெத்தனப்போக்கு என்று தெரியவில்லை.

எனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல்,கோடநாடு உள்ளிட்டவை பற்றி அண்ணாமலை பேசியிருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சொன்னது போன்று ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும் ஆனால் அது குறித்து எந்த வார்த்தையும் பேசப்படவில்லை என்றும் பேசினார். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தின் மீது 46 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழலாகி உள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக ஆட்சியை பார்த்து அண்ணாமலை கேள்வி கேட்கவேண்டும். அதன்பிறகு திமுகஅரசு பற்றி பேசவேண்டும் என்றார்.

’அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிட ரெடி’... பெங்களூர் புகழேந்தி பேட்டி...!

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நான்கு ஆண்டுகள் செய்த ஊழல்போன்று, உலகத்தில் எங்கும் ஊழல் நடந்தது இல்லை. எனவே சிறைக்கு அனுப்பும் வரை அண்ணாமலை போராடவேண்டும் என பேசினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் சிறைக்கு ஏன் போகவில்லை என்று தமிழக முதல்வரை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்லும் நாள் எண்ணப்பட்டு வருகிறது. அதன் பிரதிபலிப்பு தான் சத்தமாக பேசி அண்ணாமலையை அடக்கப் பார்க்கிறார். அண்ணாமலை இதுக்கெல்லாம் அடங்கமாட்டார், அண்ணாமலை ஒரு நிலையாக நின்று உறுதிமொழி ஏற்றுவிட்டார். ஓபிஎஸ் தலைமையில் திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் கடல் அலை போன்று தொண்டர்கள், மக்கள் கூட்டம் திரண்டுவரும் காட்சியை தமிழகம் வருகின்ற 24-ஆம் தேதி காண தான் போகிறது. அதன்பின்னர் மற்ற மண்டலங்களுக்கு ஓபிஎஸ் வரப்போகிறார். குறிப்பாக சேலம் மாவட்டத்திற்கும் வர உள்ளார். சேலத்திலும் ஆர்ப்பரிக்கும் மாநாடு நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி பொறுத்திருந்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்றும் கூறினார். இந்த மாநாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி, சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை விட்டுவிட்டு யார் வேண்டுமென்றாலும் மாநாட்டிற்கு வரலாம் உங்களை மரியாதையுடன் அழைத்து செல்வோம் என்றும் கூறினார்.

’அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிட ரெடி’... பெங்களூர் புகழேந்தி பேட்டி...!

கர்நாடகா அதிமுக பெயரைசொல்லி, ஒரு நாடகம் நடக்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் தப்பித்தால் போதும் என்று வேட்பாளர் ஓடி வந்துவிட்டார். இதில் 90 சதவீதம் திமுக வெற்றி கிடைத்துள்ளது. தொடர் தோல்விகளின் நாயகன் தான் எடப்பாடி பழனிச்சாமி எனவும் விமர்சனம் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உணவு துறையில் அதிகளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால் காமராஜிடம் சோதனை செல்லவில்லை என்றும் கூறினார். அதிமுகவின் ஊழல் பட்டியலில், யார், யார் ஊழல் செய்துள்ளார்களோ? தனித்தனியாக எடுத்து விரைவில் வெளியிடப்படும் என்றார். அதானி குழுமம் ஊழல் குறித்து பாஜக பேச அனுமதிக்க மறுக்கிறார்கள். நாடாளுமன்றமே ஸ்தம்பித்து உள்ளது. இதையெல்லாம் நியாயப்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். ஓபிஎஸ் தலைமையிலான மாநாட்டில் அன்வர்ராஜா, கேசி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். சசிகலாவும் கலந்து கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget