பூரண மதுவிலக்கு குறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள்
’’முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னார். சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுக்கடைகளை மூடுவது குறித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’’
வேலூர்மாவட்டம்,வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுகுழு கூட்டம் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் குமார், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் முரளி, சரவணன், முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம், மாநில தலைவர் ஜி,கே,மணி, மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணன், வெங்கடேசன், மகளிரணி செயலாளர் வரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சொன்னது ஆனால் மத்திய அரசு எங்களிடம் அதிகாரமில்லை என கூறியதை அடுத்து உச்சநீதிமன்றம் மாநில அரசு முடிவெடுக்கலாம் என கூறியதால் தமிழக அரசு மூன்று முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
மாநில கொள்கை முடிவை மருத்துவ படிப்புகளுக்காக எடுக்க வேண்டும் இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளது. ஆனால் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை தமிழகத்திற்கு ஏற்படும் காரணம் வெளி மாநில மருத்துவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். மின்வெட்டால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளுக்கு சரியாக படிக்க முடியாத நிலை உள்ளது அமைச்சர் இரண்டொரு நாளில் சரி செய்வதாக கூறுகிறார். ஆனால் இப்போது தான் 4 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளதாக கூறுகின்றனர். திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்தால் இருவரும் தமிழகத்தை மின் மிகைமாநிலமாக மாற்றுவதாக கூறுகிறார்கள். ஆனால் கோடைகாலத்தில் தற்போது அதிக அளவு மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளில் ஒழுக்கமின்மையை சரி செய்ய நீதிபோதனை வகுப்புகளை எடுக்க வேண்டும் ஆனால் அது இல்லை காரணம் ஆசிரியர்கள் பற்றாக்குறை 42 சதவிகிதம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
அடித்தளமே கற்றுகொடுக்க முடியாத நிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளது, ஆரம்ப கல்விக்கு அரசு முதலீடு செய்ய வேண்டும் கலாச்சார சீரழிவுகளுக்கு மதுக்கடைகள் தான் காரணம் என்றார். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபடாத நிலை இரண்டு ஆட்சியிலும் உள்ளது. உரம் வாங்கினால் விவசாயிகள் இணை பொருள் வாங்க வேண்டுமென மிகப்பெரிய ஊழல் நடக்கிறது முதல்வர் இதில் தலையிட்டு யார் ஊழல் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை லஞ்சம் வாங்கி விவசாயிகளிடம் கொள்ளையடிக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் போல் திருவிழா சம்பவங்களில் பலியாவது வேறு எங்கும் நடக்க கூடாது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்தது காரணம் தடுப்பணை இல்லாதது, தற்போது வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய குடிநீர் பிரச்சணை உள்ளது பாலாற்றை காப்பாற்ற பாமக தொடர்ந்து போராடி வருகிறது. நீர் வளத்துறை அமைச்சர் முக்கியத்துவதும் கொடுத்து அதற்குரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஆறுகளின் தடுப்பணைகளை கட்ட வேண்டும் தென்பெண்ணை, பாலாற்றை இணைக்க வேண்டும். காலநிலைமாற்றத்தால் அதிக பாதிப்புகள் ஏற்படவுள்ளது முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னார். சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுக்கடைகளை மூடுவது குறித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.