மேலும் அறிய

நானும் சிஎஸ்கே Fan..! திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல் விவாதத்திற்கு தயாரா? அறைகூவல் விடும் அன்புமணி..

திராவிட மாடல் vs பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார், திராவிட மாடல் என்பது முதலாளிகளுக்கானது பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஆனது என அன்புமணி தெரிவித்துள்ளார்..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, உத்திரமேரூரில் சுமார் 80 அடி உயர கொடிக்கம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து,வன்னியர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார் . இதனை அடுத்து பொதுக் கூட்டத்தில்  பேசி அன்புமணி ராமதாஸ்,
நானும் சிஎஸ்கே Fan..! திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல் விவாதத்திற்கு தயாரா?  அறைகூவல் விடும் அன்புமணி..
 
திராவிட மாடல் VS பாட்டாளி மாடல்
 
மே தினத்தில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால்  தமிழ்நாட்டில், திராவிட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி என்று சொன்னால், 55 ஆண்டுகள் கடந்தும் திமுக, அண்ணா திமுக ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. மக்களுக்கு மாற்றம் வேண்டும் என நினைக்கின்றார்கள். நான் நீண்ட காலமாகவே விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறேன். திராவிட மாடல் VS பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கானது.

நானும் சிஎஸ்கே Fan..! திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல் விவாதத்திற்கு தயாரா?  அறைகூவல் விடும் அன்புமணி..

பெருநிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம்
 
நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில்  முதலாளித்துவதற்காக ஒரு சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. 100 ஏக்கருக்கு மேல் தொழிற்சாலை வைத்திருப்பவர்களுக்கு, நீர் நிலைகள் ஒரு பொருட்டல்ல என சிறப்பு அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது. சாதாரண மக்கள் நீர் நிலையில் ஒரு வீடு கட்ட கூடாது .ஆனால் தொழிற்சாலை அந்த இடத்தில் கட்டலாம். இந்த சட்டம் குறித்து யாருக்கும் தெரியவில்லை, உடனடியாக திமுக அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் தெரிவித்தார்.

நானும் சிஎஸ்கே Fan..! திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல் விவாதத்திற்கு தயாரா?  அறைகூவல் விடும் அன்புமணி..
நானும் சிஎஸ்கே ஆதரவாளன்
 
மக்களுக்கு இது குறித்து எல்லாம் தெரிவது கிடையாது, கிரிக்கெட் கிரிக்கெட் அதே தான் பார்க்கிறார்கள். அதை பார்ப்பது தப்பு கிடையாது ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை கிடையாது. நானும் சிஎஸ்கே ஆதரவாளன் தான், தோனிக்கு விசில் போடு. ஆனால் அந்த அணியில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம் தான். 20 வீரர்கள் இருக்கிறார்கள் அதில் ஒருவராவது தமிழர்கள் இருந்திருக்க வேண்டும் பேரிலேயே, சென்னை வைத்து கொண்டு தமிழக வீரர்கள் இல்லாமல் இருப்பது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார.
 
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு
 
தமிழகத்தில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட சமுதாயமாக தலித் சமுதாயம் அதற்கு அடுத்த இடத்தில் வன்னியர் சமுதாயம் உள்ளது. இரண்டு சமுதாயத்தையும் சேர்ந்தால் 40% மக்கள் தொகை வரும். 40 விழுக்காடு மக்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அது அவர்களின் உரிமை.இந்த மாதம் 31ம் தேதிக்குள் ,10.5% இட ஒதுக்கீடு கொடுத்தாக வேண்டும் , இல்லையென்றால் என் தம்பிகள் இருக்கிறார்கள், பார்த்துக் கொள்வோம் என கூட்டத்தை நோக்கி பேசினார் பேசினார். வன்னியர் இட ஒதுக்கீடு என்பது உரிமைப் பிரச்சினை, வாழ்வாதார பிரச்சனை, இது சமூக நீதிப் பிரச்சனை .மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உயிரோடு இருந்திருந்தால், 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்திருப்பார் என தெரிவித்தார்.
 
நானும் சிஎஸ்கே Fan..! திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல் விவாதத்திற்கு தயாரா?  அறைகூவல் விடும் அன்புமணி..
என்எல்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்
 
தமிழ்நாடு விவசாயத்துறை அமைச்சர், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விவசாய நிலங்களை பறித்து என்எல்சிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார் . அப்பகுதி மக்களை பார்த்தால் பாவமாக உள்ளது. கடலூர் என்எல்சி எதிராக மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்க போகிறேன். எல்லோரும் வரவேண்டும். மக்களையும், மண்ணையும் வருங்கால சந்ததிகள் காப்பாற்ற வேண்டும். என்எல்சி நிறுவனம் அடுத்த வருடம் தனியார்க்கு விற்கப் போவதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்கள். தனியாருக்கு விற்க போகும் நிறுவனத்திற்காக,  வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Embed widget