AIADMK TVK Alliance: விஜய்க்கு போன் போட்ட இபிஎஸ்! 30 நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை! DEAL-ஐ முடித்த பவன் கல்யாண்!
விஜய்-க்கு போன் போட்ட இபிஎஸ்! வாங்க தம்பி பாத்துக்கலாம் என்ற எடப்பாடி, பொங்கலுக்கு பிறகு வரேன் அண்ணா என்ற விஜய்! அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை பின்னணியில் பவன் கல்யாண் என்ற தகவல் வெளியான பரபரப்பை கிளப்பி உள்ளது

இபிஎஸ், விஜய்க்கு ஃபோன் போட்டு சுமார் 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கின்றனர். இதற்கு பின்னணியில் பவன் கல்யாணின் பக்கா ப்ளான் இருந்ததாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டணி பற்றி முக்கியமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அரசியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார் தவெக தலைவர் விஜய். இதுதொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் மேலும் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
சிக்கலில் தவெக
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. மேலும் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவுவிட்டுள்ளது. இப்படி தவெகவிற்கு அரசியல் ரீதியாகவும் சரி, நீதிமன்றம் ரீதியாகவும் சரி அடுத்த அடுத்த பேரிடியாகவே விழுந்தது. இது தவெக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை
இந்தநிலையில் தான் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் விஜய்-க்கு ஆதரவாக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வந்தனர். கரூரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என்று வாக்குறுதியளித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி பரப்பரப்பான அரசியல் களத்துக்கு மத்தியில் கடந்த திங்கள்கிழமை அக்., 06-ம் தேதி விஜய்-க்கு போன் போட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ஆறுதல் தெரிவித்துள்ளார் மேலும் இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக அதிமுக, தவெக தலைவர்கள் பேசியதாக பல்வேறு தகவல்களை நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன. அதாவது அதிமுக-தவெக கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மேலும் இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 30 நிமிடம் நீடித்ததாகவும் அதிமுகவின் முக்கியமான ஒரு தலைவர் தன்னுடைய பெயரை குறிப்பிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு தெரிவித்துள்ளார். அதேபோல இன்னொரு தலைவர் கூறுகையில், அதிமுக-தவெக கூட்டணி 2026 பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும், எங்களுக்கு பொது எதிரி திமுகதான் ஆகவே நாங்கள் இருவரும் கூட்டணி வைப்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தவெக தரப்பில் இது பற்றி விசாரித்தபோது, விஜய், ஈபிஎஸ் பேசியது உண்மைதான் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி தொடர்பாக கேட்கும் போது தற்போது அதுபற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது , எதுவாக இருந்தாலும் விஜய்தான் அறிவிப்பார் என்று அவர்கள் நழுவிகொண்டனர். இந்த தகவலை அதிமுக மற்றும் த.வெ.க தரப்பில் இருந்து யாரும் இதுவரை மறுக்காத நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது உண்மைதான் என தெரியவருகிறது.
சீனுக்கு வந்த பவன் கல்யாண்
அதேபோல், விஜய், ஈபிஎஸ் பேச்சுவார்த்தை எப்படி சாத்தியமானது என விசாரித்தபோது, ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தான் காரணம் என சொல்கின்றனர். திமுகவின் தொடர் அரசியல் அழுத்தங்களை எதிர் கொள்ள நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேசவேண்டும் என்று விஜய்-யிடம் பவன் கல்யான் ஐடியா கொடுத்ததாக பேச்சு அடிபடுகிறது. இதற்கு விஜய் உடனே ஓக்கே சொன்னதும், இந்த தகவலை தனது சோர்ஸ் மூலம் அதிமுகவினர் காதுகளுக்கு கொண்டு சென்றுள்ளார் பவன் கல்யாண். இதனை அடுத்து இபிஎஸ் விஜய்க்கு போன் போட்டு கரூர் சம்பவம் தனது ஆறுதலை தெரிவித்ததாகவும், மேலும் நடப்பு அரசியல் பற்றி சுமார் 30 நிமிடம் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தை இரண்டு தரப்பிலும் மன நிறைவாக இருந்ததாக பேச்சு அடிபடுகிறது.





















