மேலும் அறிய
Advertisement
AIADMK Protest : போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்; தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டனம்
தமிழகத்தில் விற்பனையாகும் கள்ளச்சாராயத்தையும், சட்ட ஒழுங்கு சீர்குலைவையும் தடுக்க தவறிவிட்ட்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் போராட்டம் ( aiadmk protest )
தமிழகத்தில் விற்பனையாகும் கள்ளச்சாராயத்தையும், சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பதவி விலக வலியுறுத்தி, அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் விற்பனையாகும் கள்ளச்சாராயத்தையும் கள்ளச்சாராய உயிர் உறுப்புகளையும், சட்ட ஒழுங்கு சீர்குலைவையும் தடுக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ மதனந்தபுரம் கே பழனி, ஸ்ரீ பெருமந்தூர் நகர வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன், எம் ஜி ஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எஸ். எஸ்.ஆர். சத்யா மற்றும் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தை ஒட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சித்தாமூர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலம் மகளிர் அணி இணைச் செயலாளரும், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல் கலந்துகொண்டு திமுக அரசு கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தனபால், மனோகரன், சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion