AIADMK Internal Polls: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் அறிவிப்பு: முழு விபரம் இதோ!
AIADMK Internal Polls: தேர்தல் ஆணையர்களாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமனம்
அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது . அதில் கட்சியில் சில விதிகள் திருத்தம் செய்யப்பட்டன. அதன்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்யும் முறை குறித்த புதிய விதி அறிவிக்கப்பட்டது.
சிறப்பு தீர்மானம் ! pic.twitter.com/hngIvgvEWc
— AIADMK (@AIADMKOfficial) December 1, 2021
நேற்று நடந்த அதிமுக செயற்குழுவில் முடிவு செய்த படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யும் தேர்தல்குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதோ அந்த அறிவிப்பு அப்படியே...
இந்த அறிவிப்பின் படி, தேர்தல் ஆணையர்களாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 3 வெள்ளக்கிழமையும், டிசம்பர் 4 சனிக்கிழமையும் நடைபெற உள்ளது. வேட்பு மனு பரிசீலனையானது டிசம்பர் டிசம்பர் 5 ம் தேதியும், வேட்புமனு வாபஸ் பெற டிசம்பர் 6 திங்கட்கிழமையும் நடைபெறும்.
டிசம்பர் 7 செவ்வாய் அன்று தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு இதோ:
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/8HEX2QZjTD
— AIADMK (@AIADMKOfficial) December 2, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில...
ஆணாக மாற பெண் காவலருக்கு அனுமதி... மத்திய பிரதேச அரசு அளித்த மாபெரும் ஆபர்!
ஒருவழியா முடிந்த அர்ஜூன்-ரோஜா முதல் இரவு... அனுவின் கடைசி கட்ட முயற்சிகள் முறியடிப்பு!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்