ஆணாக மாற பெண் காவலருக்கு அனுமதி... மத்திய பிரதேச அரசு அளித்த மாபெரும் ஆபர்!
மத்திய பிரதேசத்தில் பெண்ணில் இருந்து ஆணாக மாற பெண் காவலருக்கு மாநில உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் மூன்றாம் பாலின மக்கள் மீது பொதுமக்களின் பார்வை சற்று வித்தியாசமாகவே இன்றளவும் இருந்து வருகின்றது. அவர்களுக்கென கிடைக்கும் உரிமையும் அவ்வப்போது தடுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் தற்போது முதலமைச்சர் சிவ்ராஜ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கடந்த 2019 ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவர் தான் ஆணாக மாற வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதன் அடிப்படையில் அவரின் கோரிக்கையை ஏற்ற மாநில உள்துறை அமைச்சகம், அவரின் விருப்பப்படி, பாலினத்தை மாற்ற மாநில டி.ஜி.பி.,க்கு அனுமதி வழங்கப்பட்ட உள்ளது. அந்த பெண் காவலர் அளித்த விண்ணப்பத்தில், அரசு ஆவணங்களிலும், தன்பாலினத்தை பெண்ணில் இருந்து ஆணாக மாற்ற, அவர் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக, உள்துறையின் கூடுதல் தலைமை செயலர் டாக்டர் ராஜேஷ் ரஜோரா நேற்று தகவல் தெரிவிக்கையில், சிறு வயதில் இருந்தே அந்த பெண் கான்ஸ்டபிள், தன் பாலினத்தை அடை யாளம் காண முடியாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தை உளவியலாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த பெண் காவலர், ஆண் காவலர் போன்று அனைத்து விதமான பணிகளையும் துரிதமாகவும், எளிதாகவும் செய்து விடுவதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக, அவர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, அவரின் விருப்பப்படி, பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்