மேலும் அறிய

அதிமுக செயற்குழு கூட்டம் கூடுகிறது: டிசம்பர் 1 நடைபெறுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 01.12.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 01.12.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

முன்னதாக, சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகமான பரபரப்புடன் முடிவடைந்தது. அதிமுக தலைமை வலிமையாக இல்லை என்று இராமநாதபுரம் முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜாவின் கருத்துக்கு, சிவி சண்முகம் உள்ளிட்ட முன்னணித்  தலைவர்கள் கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதற்கிடையே, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மரகதம் குமரவேல் அவர்களின் உறவினர் சுரேஷ் என்பவரை இலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கூட்டத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வழிகாட்டுதல் குழு தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக- எனும் பேரியக்கத்தை வழிநடத்தும் அதிகாரம் படைத்த ஒன்றாக வழிகாட்டுதல் குழுவை மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வழிகாட்டுதல் குழு அமைப்பதை தனது நிபந்தனைகளில் ஒன்றாக வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, திருப்பூரில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில், மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைத்தார். ஒ.பி.எஸ் பிரிவின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த இவர், அதிமுகவின் வழிகாட்டு குழுவிலும்  இடம்பெற்றிருந்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

தலைப்பு செய்திகள்

ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget