மேலும் அறிய

நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு செல்லவில்லை..! பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.க்கே அதிகாரம்..! - வைத்திலிங்கம்

அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்க்கூடாது என்று தேர்தல் ஆணையத்தை நாடவில்லை என்றும், பொதுக்குழுவை கூட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கே அதிகாரம் என்றும் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது கட்சியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

“அவர்கள் அனைத்து பதவிகளையும் ரத்து செய்வதாக பொதுக்குழுவில் சொன்னார்கள். ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களையே ஆரம்பத்திலே ரத்து செய்துவிட்டார்கள். பொதுக்குழு கூட்ட வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. 23 தீர்மானங்கள் மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும். மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறிவிட்டனர்.

அப்படி இருந்தும் இவர்கள் எப்படி தீர்மானத்தை நிறைவேற்றலாம்? ரத்து செய்கிறோம் என்று எப்படி தீர்மானம் கொண்டு வரலாம்? அவைத்தலைவர் என்று எப்படி தேர்வு செய்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றலாம்?  அவைத்தலைவரை தேர்வு செய்தது செல்லாது என்று சொல்கிறேன். அப்படியே அவைத்தலைவர் தேர்வு என்றால் பல பேர் போட்டி போட வேட்புமனு வாங்கினார்களா? எதுவுமே கொடுக்காமல் எப்படி அவைத்தலைவரை தேர்வு செய்யலாம்?

நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு செல்லவில்லை..! பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.க்கே அதிகாரம்..! - வைத்திலிங்கம்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்தாகும்போது இப்போது உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியும் ரத்தாகிறது. அப்போது எப்படி அவைத்தலைவர் பதவியை கொண்டு வர முடியும்? எப்படி தீர்மானங்களை ரத்து செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்திற்கு தகவல் மட்டும் சொன்னால் போதும் என்று கூற வேண்டும் என்பது உண்மைதான்.

நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கே செல்லவில்லை. நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு செல்லவே இல்லை. ஐந்தில் ஒரு பங்கு கூட்டத்தை கூட்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என்பது உண்மை. ஆனால், அந்த கூட்டத்தையே நடத்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால்தான் முடியும். அவைத்தலைவரால் பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியாது. அது செல்லாது.

நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு செல்லவில்லை..! பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.க்கே அதிகாரம்..! - வைத்திலிங்கம்

பழைய பதவி இருந்தால் பொருளாளர்தான் நடத்த முடியும். அப்படி நடத்துவது என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான் நடத்துவார். அவைத்தலைவர் மற்றும் பொருளாளர் தான் பொதுக்குழுவை நடத்தலாம் என்று இரட்டை இலையை கொடுக்கும்போது கூறினர். சி.வி.சண்முகம் கூறியபடியே பொதுக்குழுவை கூட்ட பொருளாளருக்குதான் அதிகாரம் உண்டு. “

இவ்வாறு அவர் கூறினார்.  

மேலும் படிக்க : ADMK OPS : பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ள ஓ.பி.எஸ்..! எடப்பாடிக்கு செக் வைக்க திட்டமா..?

மேலும் படிக்க : Vijayakanth: சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் விஜயகாந்த்?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget