Meg Lanning: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மெக் லேனிங் திடீர் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லேனிங் காலவரையற்ற ஓய்வெடுத்துக்கொள்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்!
ஆஸ்திரேலியாவின் மகளிர் கிரிக்கெட் அணியினரும் சரி, ஆண்கள் கிரிக்கெட் அணியினரும் சரி, வலுவான ஆட்டத்தை வெளிபடுத்தி எதிரணிக்கு பயம் காட்டுவதில் சிறந்தவர்கள் என்ற பெயரைப் பெற்றவர்கள். அப்படி சிறப்பான ஆட்டக்காரர்களில் ஒருவர் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லேனிங். சர்வதேச கிரிக்கெட்டிலும், காமன் வெல்த் கிரிக்கெட்டிலும் சரமாரி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், தற்போது காலவரையற்ற ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் மெக் லேனிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்றது. ஆரம்பம முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா, தன்னை எதிர்த்து ஆடிய எந்த அணியையும் ஜெயிக்க விடாமல், முன்னிலை வகித்தது. இதனால், ஆஸ்திரேலியா, இறுதிப்போட்டிக்கு எந்தவித தங்கு தடையுமின்றி முன்னேறியது. இறுதிப் போட்டியில், இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தியது. இந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங் தற்போது காலவரையின்றி ஓய்வு பெறுவதால், மெக்கின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தகவல்
மெக் லேனிங்கின் ஓய்வு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மெக் லேனிங்கிற்கு இந்த ஓய்வு மிகவும் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷான் ஃப்ளெஜ்ஜர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கிரிக்கெட் அணியினரின் ஓய்வு, அணிக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும், மெக் எடுத்துள்ள இந்த முடிவை முழுமையாக மதிப்பதாகவும் கூறியுள்ளார்.
மெக் லேனிங்கின் சாதனைகள்
மெக் லேனிங்கின் தலைமையில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணி, இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளது. இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி இதுவரை, மகளிருக்கான உலகக் கோப்பை போட்டியில் இருமுறையும், ஐசிசியின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நான்கு முறையும் கோப்பைகளை வென்றுள்ளது. அது மட்டுமன்றி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிடகளிலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவரது தலைமையில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி, பல வெற்றிகளை குவித்துள்ளது.
அது மட்டுமன்றி ஐசிசியின் தரவரிசை பட்டியலிலும் இவர் 5 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram