Vinayagar Chaturthi 2024: நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. விதவிதமான விநாயகர் சிலைகள் விறுவிறு விற்பனை..
மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள நிலையில் ஏராளமான விநாயகர் விற்பனைக்கு தயாராக உள்ளன.

நாடுமுழுவதும், வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து பின்னர் எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
விநாயக சதுர்த்தி என்ற மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம். மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள்.
இந்து புராணங்களின் அடிப்படையில் கணேசன் முழு முதற்கடவுளாகிறார். கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேசரின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார்.
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாக்காக பல வண்ணங்களிலும், பல வடிவங்களில், விதவிதமான பொருட்களை கொண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்படுவர். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதை வாடிக்கையாக செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு இடங்களில் 395 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைபெறும் இடமான பழையபேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் 7 மற்றும் 8-ம் தேதி விநாயகர் ஊர்வலத்திற்கு தேவையான பாதுகாப்பு குறித்து சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமாரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,
மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 395 விநாயர்கள் சிலைகள் வைத்து வழிபாடு செய்து விசர்ஜனம் செய்வதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் 10 அடி உயரத்திற்குள் இருக்கவேண்டும் என விழாகுழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் விழா குழுவினர் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு தேவையான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள். புதிய விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு அனுமதி கிடையாது என்றார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மணக்குடி, அரும்பாக்கம், மூங்கில்தோட்டம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுப்படி ரசாயன பொருள்கள் கலக்காதவாறு, கடல், ஆறு, குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளில் விநாயகரை கரைக்கும் போது பொதுமக்களுக்கும் மற்றும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படாதவாறு நீர் நிலைகளில் எளிதில் கரையக்கூடிய காகிதக்கூழ், மரவள்ளி கிழங்கு கூழ், சுண்ணாம்பு பவுடர், தேங்காய் நார், சவுக்கு, மூங்கில் குச்சிகளை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய வகையில் கற்பக விநாயகர், எலி விநாயகர், லிங்க விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் ஒரு அடி முதல் 10, அடி வரை விநாயகர் சிலைகளை உருவாக்கி வாட்டர் கலர் மூலம் பல்வேறு வர்ணம் தீட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

