மேலும் அறிய

Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

மயிலாடுதுறையில் திருவள்ளூவர் சிலையுடன் நடைபெற்ற ரத ஊர்வலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று, திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகின்றது. மனிதன் அறநெறி கொண்டு வாழ வேண்டும் என்று வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை ஈரடிக் குறளில் சொல்லி, முப்பால் தந்து நல்வழிப் படுத்திய திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ பொங்கலுக்கு அடுத்தநாள் அனுசரிக்கப்படுகிறது. 1330 திருக்குறள் மூலம், வாழ்க்கை நெறிகளைக் கற்பித்தவர் திருவள்ளுவர். சமயம் சார்ந்திராத நூல்களில், நாற்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில், திருக்குறள், மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் நூறு நபர்கள் திருக்குறளை மொழி மாற்றம் செய்துள்ளனர்.

Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

பல பண்டைய புலவர்கள் திருக்குறளை புகழ்ந்து எழுதிய பாடல்கள் ‘திருவள்ளுவ மாலை’ என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவர் பிறந்த காலத்தைப் பற்றிப் பற்பல கருத்துக்கள் நிலவினாலும், ஆராய்ச்சி வல்லுநர்கள், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முந்தையது என்றும், அவர் பிறந்தது, வைகாசி அனுஷம் என்றும் முடிவெடுத்தார்கள். திருவள்ளுவர் பெயரில், தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அந்த தமிழ் ஆண்டை, ‘திருவள்ளுவர் ஆண்டு’ என்று குறிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போதைய ஆங்கில ஆண்டு 2024 என்பது திருவள்ளுவர் ஆண்டு 2055.

Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

திருவள்ளுவர் திருநாள் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது 1935, ஜனவரி 17ஆம் தேதி. இதற்காக காழி சிவகண்ணுச்சாமிப் பிள்ளை மற்றும், திரு.வ.சுப்பையா அவர்கள் ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார்கள். முதல் திருவள்ளுவர் திருநாள், 1935ஆம் ஆண்டு மே 17, 18 தேதிகளில், பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மறைமலையடிகளார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. ஆகிய தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். காலப் போக்கில், இது மறைந்து போக, பெருத்த முயற்சிக்குப் பிறகு, 1959ஆம் வருடம் மே 22 ஆம் தேதி (வைகாசி மாதம், அனுஷ நட்சத்திரம்) திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டது.

Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

வைகாசி, அனுஷ நட்சத்திரம் என்று கொண்டாடப்படுவதால், ஆண்டுக்கு ஆண்டு, ஆங்கில நாட்காட்டியில் தேதி மாறுபாடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவியது. தைப் பொங்கல், தமிழர் திருநாள் என்பதால், அந்த நாளை திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன், 1954 ஆம் ஆண்டு முன்மொழிந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. 1966 ஆம் ஆண்டு, ஜூன் 2 ஆம் தேதி, திருவள்ளுவர் தினமாக கொண்டாட அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், 1971 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினம், தை மாதத்திற்கு மாற்றப்பட்டடு ஜனவரி 17 -ஆம் தேதி திருவள்ளுவர் தினம் அன்றுமுதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1971 ஆம் ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு பற்றி, அரசின் இதழில் குறிக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

1981ஆம் ஆண்டு, மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள், திருவள்ளுவர் ஆண்டை, தமிழக அரசின் ஆவணங்களில் பதிவு செய்ய அரசாணையைப் பிறப்பித்தார். இந்நிலையில் மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பில், திருவள்ளுவர் தினத்தை அடுத்து திருவள்ளுவர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அவ்வையார் தேரை ஓட்டுவது போல் திருவள்ளுவரின் சிலையுடன், காவிரிக்கரையில் இருந்து ரத ஊர்வலம் துவங்கியது. இந்த திருவள்ளுவர் ரத ஊர்வலத்தை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கொடியசைத்து ரத ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மயிலாடுதுறையில் நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

Thiruvalluvar Day: மயிலாடுதுறையில் திருவள்ளுவர் ரத யாத்திரை; கொடியசைத்து தொடங்கி வைத்த எஸ்பி

பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், திரளான பொதுமக்கள், தமிழறிஞர்கள், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனையடுத்து மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 108 வது கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, தமிழ் அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் 133 அதிகாரங்களால் திருவள்ளுவர் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்து பிரபாகரன் என்ற இளைஞர் தமிழ் சங்கத்துக்கு வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
UDISE Report: இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு; மகிழ்ச்சி தரும் மத்திய அரசு புள்ளிவிவரம்!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Embed widget