மேலும் அறிய

Pongal Gift 2024 : மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை  அமைச்சர் மெய்யநாதன் வழங்கி தொடங்கி வைத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டாரம், ஆறுபாதி  ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு  குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு, வேட்டி, சேலை, 1000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையேற்க, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம்  பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

Pongal Gift 2024 : மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்ற நாள்முதலாக பல எண்னற்ற சாதனைகளை செய்து வருகிறார். கடந்த மாதம் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நேரடியாக களத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதேபோல தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டார். மாதம் மாதம் 15 -ம் தேதி 1,13,84,000 பெண்களுக்கு வழங்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை  தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 10-ம் தேதியிலிருந்து வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 7, 8-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் 1,70,000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Pongal Gift 2024 : மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

குறிப்பாக அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த 18000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்கதிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருவார காலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள கடலை பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே  அதற்கான கணக்கெடுக்கும் பணிக்காக மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். கணக்கெடுக்கும் பணி நிறைவுபெற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆறுபாதி மக்களின் சுகாதாரத்தை காக்கும் வகையில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Pongal Gift 2024 : மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 இலட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 283 மெ.டன் பச்சரிசி, 283 மெ.டன் சீனி, 2 லட்சத்து 83 ஆயரம் முழுநீளக்கரும்பு மற்றும் 28.30 கோடி ரூபாய் ரொக்கத்தொகை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்பானது கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் 411 நியாக விலைக்கடைகள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 10 நியாயவிலைக்கடைகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் 10 நியாய விலைக்கடைகள்,கோழிவளர்போர் கூட்டுறவு சங்கம் நடத்தும் 1 நியாய விலைக்கடை ஆக மொத்தம் 432 நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. எனவே இன்று முதல் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று, வருகிற பொங்கல் திருநாளை நாம் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்" என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் த.ராஜேந்திரன், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துளசிரேகா, ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி, ஆறுபாதி ஊராட்சி மன்றத்தலைவர்  கே.தமிழரசி, ஆறுபாதி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ்.தேவி; மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget