மேலும் அறிய

நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் திட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான வினியோக தேதியினை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் திட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான வினியோக தேதியினை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று அத்தியாவசிய பொதுவிநியோகப் பொருட்களை விநியோகிக்கும் சிறப்புத் திட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான வினியோக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

இல்லம் தேடி வரும் அரசின் சேவை

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களைப் பெற இயலாத முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட  ‘இல்லம் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் சிறப்புத் திட்டம்’ சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், உடல்நலக்குறைவு மற்றும் இயலாமை காரணமாகப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத சூழலில் உள்ள எளிய மக்களுக்கு உதவவும் இத்திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது.

ஆகஸ்ட் மாத விநியோக அட்டவணை

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதியுடைய பயனாளிகளுக்கு, 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணி வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற உள்ளது.

யாரெல்லாம் பயன்பெறலாம்?

இத்திட்டத்தின் நன்மைகளைப் பெற பின்வரும் தகுதிகளைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் முன்னுரிமை பெறுகிறார்கள்.
65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள்: ரேஷன் கடைக்கு நேரில் வர இயலாத 65 வயதைக் கடந்த முதியவர்கள் மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்.

மாற்றுத்திறனாளிகள்: தீவிர உடல் ஊனம் அல்லது இயலாமை காரணமாக வெளியில் வர இயலாத மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள்.

மேற்கண்ட தகுதியுடைய பயனாளிகளின் இல்லத்திற்கே நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் நேரடியாகச் சென்று, அவர்களுக்குரிய அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொதுவிநியோகப் பொருட்களையும் எடைக் குறைவின்றி பாதுகாப்பாக விநியோகம் செய்வார்கள்.

பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய 65 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தங்கள் இல்லங்களிலேயே இருந்து இச்சிற் சிறப்புத் திட்டத்தினைப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பொருட்களின் தரத்திலோ அல்லது விநியோகத்திலோ ஏதேனும் சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருப்பின், அது குறித்துச் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களையோ (TSO) அல்லது மாவட்ட வழங்கல் அலுவலகத்தையோ உடனடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசால் வழங்கப்படும் இந்தச் சேவையைப் பயன்படுத்தி, நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வரத் தேவையின்றித் தங்கள் இல்லங்களிலேயே சிரமமின்றி பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!
நாகப்பட்டினத்தில் இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் விநியோகம்!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Embed widget