மேலும் அறிய

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..

மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வெளிசந்தை முறையில் முகமை மூலம் நிரப்பப்படவுள்ள இக்காலிப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பணியிட விபரம் மற்றும் மாத ஊதியம்

தமிழ்நாடு அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான வங்கி கடன் உதவிகளை தடையின்றி ஒருங்கிணைக்கவும் இந்த கடன் மேலாண்மை முகமை செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட அளவில் தீவிரப்படுத்துவதற்காக மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் (District Banking Coordinator) பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபருக்கு பிரதி மாதம் ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கல்வி மற்றும் சேவைத் தகுதிகள்

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது மண்டல கிராமப்புற வங்கிகளில் (RRB) உயர் அலுவலராகப் பணிபுரிந்து முறைப்படி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். வங்கித்துறையில் கடனுதவி வழங்குதல், ஊரக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி உதவி அளித்தல் ஆகிய பணிகளில் நீண்ட அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

இருப்பினும், தன்விருப்ப ஓய்வு பெற்றவர்கள் (Voluntary Retirement) மற்றும் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

வயது வரம்பு மற்றும் பிற நிபந்தனைகள்

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பைப் பொறுத்தவரை, ஓய்வுபெற்ற அலுவலர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வங்கி நிர்வாகம், கடன் மேலாண்மை மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த முழுமையான புரிதல் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட அளவில் பல்வேறு வங்கிக் கிளைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இலக்குகளை அடையும் திறன் கொண்ட ஆற்றல்மிகு ஓய்வுபெற்ற அதிகாரிகள் இதன் மூலம் பயனடையலாம்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் முழுமையான விவரங்கள் அடங்கிய சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றுகள், வங்கிப் பணி அனுபவச் சான்று மற்றும் ஓய்வு பெற்றதற்கான ஆவணங்களின் நகல்களுடன் தங்களது விண்ணப்பங்களை தயார் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 

"இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), 4-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், மயிலாடுதுறை - 609305" என்ற முகவரிக்கு நேரில் நேர்முகமாகவோ அல்லது பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 25.08.2026 அன்று மாலை 5.00 மணி ஆகும். குறிப்பிடப்பட்ட நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். எனவே, தகுதியுடைய ஓய்வுபெற்ற வங்கி அலுவலர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
மாத சம்பளம் ₹50,000! மயிலாடுதுறை மகளிர் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு - தகுதிகள் இதுதான்..
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget