மேலும் அறிய

2 வயது குழந்தையுடன் தூக்கி வீசப்பட்ட குடும்பம் - பதைபதைக்க வைத்த பயங்கர விபத்து

மயிலாடுதுறை அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்ட குடும்பத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்ட குடும்பத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேருக்கு நேர் மோதி கொண்ட வாகனங்கள்

சிதம்பரம் - நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடைவீதி அருகே கடந்த ஜூன் 21 -ஆம் தேதி அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிக் கோர விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பூம்புகார் அடுத்த வானகிரி மீனவர் கிராமம் சுனாமி நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி சசிகலா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர், அவர்களது 2 வயது மகன் பாரத் சஞ்ஜன் பலத்த காயமடைந்தார்.

Polytechnic Colleges Admission: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை?

தூக்கி வீசப்பட்ட குடும்பம்

ஸ்ரீதர் தனது மனைவி மற்றும் மகனுடன் தனது இருசக்கர வாகனத்தில் வெளியூர் சென்றுவிட்டு மூவரும் தரங்கம்பாடி சாலை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு அதிவேகமாக சென்ற கார் ஒன்று ஸ்ரீதர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீதருக்கு தலையில் பலத்த அடிப்பட்டும், மனைவி சசிகலாவுக்கு தலை, வலது கையிலும், குழந்தை பாரத் சஞ்ஜன் இடுப்பில் அடிப்பட்டு சாலையில் உயிருக்கு போராடி கிடந்துள்ளனர்.

Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி

கணவன் - மனைவி உயிரிழப்பு

அதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொறையார் காவல்துறையினர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொறையார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி சசிகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை பாரத் சஞ்ஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Army Accident: லடாக் ஆற்றில் கவிழ்ந்த டேங்க் வாகனம்.. 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

இதனை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் 43 வயதான அருள்சாலமன் என்பவரை பொறையார் காவல்துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொள்ளும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Embed widget