Mayiladuthurai Power Shutdown (05.07.2025) : மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம். எங்கெல்லாம் தெரியுமா...?
Mayiladuthurai Power Shutdown 05.07.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (05.07.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்வாரிய செய்தி குறிப்பு
அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய சீர்காழி கோட்டம் செம்பனார்கோயில் உதவி செயற் பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேமாத்தூர் துணைமின் நிலையத்தில் நாளைய தினம் 05.07.2025 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான மேமாத்தூர், கீழ்மாத்தூர், வாழ்க்கை, வல்லம், பழையதிருச்சம்பள்ளி, பெரிமடபுரம்,சாத்துனூர், கீழபரசலூர், மேலபரசலூர், பரசலூர், ஆறுபாதி, விளநகர், மேலகட்டளை, கடலி, ஒட்டங்காடு, நெடுவாசல், பெருங்குடி, கூடலூர், ராதாநல்லூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மின்கோட்டம்
இதேபோன்று மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் நாளைய தினம் 05.07.2025 சனிக்கிழமை அன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மயிலாடுதுறை உதவி செயற் பொறியாளர் அப்துல் வஹாப் மறக்காயர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்த இடங்கள்
மூவலூர், சித்தர்காடு, அரையபுரம், மறையூர், கூறைநாடு, மகாதானதெரு, பெரிய கடைதெரு, பூம்புகார் ரோடு, தருமபுரம் மெயின் ரோடு, தரங்கை சாலை, வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர், அரங்ககுடி, செறுதியூர்,குளிச்சார்,
மணக்குடி துணை மின்நிலையம்
அதேபோல் மணக்குடி மற்றும் மயிலாடுதுறை அர்பன் துணை மின்நிலையங்களில் நாளைய தினம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த இரு துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை மின் வினியோகம் இருக்காது என மயிலாடுதுறை மின்வாரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மணக்குடி மற்றும் மயிலாடுதுறை அர்பன் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பணிகள் என்ற பெயரில் அதனை செய்யாமல் மின் நிறுத்தம் செய்து விட்டு, தனியார்களுக்கு சாதகமான பணிகளை மேற்கொள்வதாகவும், இதனால் பரபரப்பு இன்றி நாள்தோறும் இப்பகுதியில் தொடர் மின்வெட்டு பல மணி நேரம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
சேமங்கலம், ஆலவெலி, நந்தம், வேப்பங்குளம், சாவடி, உளுந்துக்குப்பை, மொழையூர், ஆனதாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை ,பழைய SBI தெரு, அரசு மருத்துவமனை, மகாதான தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகார் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம், மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஏ.வி.சி.கல்லூரி, மன்னன்பந்தல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.






















