மேலும் அறிய

Kerala New year Food: பச்ச மாங்காய் பச்சடி, இஞ்சி ரசம் கேரள புத்தாண்டு சிறப்பு உணவுகள் - ரெசிபி இதோ!

Kerala New year Vishu Food: கேரள புத்தாண்டு உணவுகள் சிலவற்றின் செய்முறைகளை இங்கே காணலாம்.

கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மலையாளப் புத்தாண்டு. (விஷு). இந்த திருவிழா மக்களின் வாழ்வில் ஒரு புதிய தொடக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் சமம் என்று பொருள், எனவே, இந்த பண்டிகை பகல் மற்றும் இரவுகள் கால அளவில் கிட்டத்தட்ட சமமாக இருக்கும், வசந்த உத்தராயணத்தை கொண்டாடுகிறது. சிறப்பு வழிபாடு செய்து அந்த நாளை கொண்டாடுவர் மலையாள புத்தாண்டு நாளில் செய்யப்படும் சிறப்பு உணவுகள் பற்றி இங்கே காணலாம். 

வாழை இலையில் வாழைப்பழம், நேந்திர சிப்ஸ்,தோரன், பச்சடி, கிச்சடி,ம் சோறு, மோர் கரி ரசம், பாயசம் உள்ளிட்டவற்றோடு குடும்பத்தினருடன் நண்பர்களுடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்வர்.

பச்ச மாங்காய் பச்சடி 

ஓணம், விஷு நாட்களில் பச்சை மாங்காய் பச்சடி செய்யப்படும். மாங்காய், யோகர்ட், தேங்காய் சேர்த்து செய்யப்படும் சுவையான ஒன்று. மாங்காயை சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காயை துருவி வைத்து கொள்ள வேண்டும். காரத்திற்கு பச்சை மிளகாய்.ப்ளைன் யோகர்ட் அல்லது தயிர் சேர்த்து அதில் மாங்காய், துருவிய தேங்காய் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தாளிக்க, எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்தால் போதும். இதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

ஓலன்

பரங்கிகாய், தேங்காய் பால், காரமணி வைத்து செய்யப்படும் உணவு. இதை எளிதாக செய்து விடலாம். 0ரு மணி நேரம் ஊறவைத்து எடுத்த காராமணி, நறுக்கிய பரங்கிகாய் இவற்றோடு உப்பு சேர்த்து நன்றாக குக்கரில் வேக வைத்து எடுக்கவும். தேங்காய பால் எடுத்து வைக்கவும்.
காராமணி வெந்ததும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், அதில் தேங்காய் பால் ஊற்றவும். தாளிக்க தேங்காய எண்ணெயில் பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து காராமணியுடன் சேர்த்து 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கினால் ஓலன் ரெடி.

வடை கூட்டுக் கறி

திருவனந்தபுரத்தின் மிகவும் பிரபலமான உணவு வடை கூட்டுக் கறி. உருளைக் கிழங்கு, உளுர்ந்து வடை வைத்து செய்யப்படும் உணவு. உளுந்து வடை தேஙகய் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். உருளைக் கிழங்கை நறுக்கி வேகவைத்து எடுக்கவும். பொடியாக வெங்காயத்தை தேங்காய் எண்ணெயில் வதக்கி, உருளைக் கிழங்கு, சிறிய துண்டுகளாக நறுக்கிய வடயையும் சேர்த்து வதக்கவும். சிகப்பு மிளகாய் பொடி, மஞ்சள்,மிளகு தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கினால் வடை கூட்டுக் கறி ரெடி. தாளிக்க கடுகு, உளுந்துப் பருப்பு பயன்படுத்தலாம்.

விஷுக் கனி

விஷுக்கனி என்பது, வெள்ளரி, தேங்காய், அரிசி, பாக்கு, வெற்றிலை, தங்க ஆபரணங்கள், நாணயங்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வைத்து, நடுவில் செப்பு விளக்கு ஏற்றி, ஏற்பாடு செய்யப்படும். இந்த அமைப்பை கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் படத்தின் முன் வைக்கிறார்கள். வாழை சிப்ஸ், கறி, சாதம், ஊறுகாய் மற்றும் வாழை இலையில் பரிமாறப்படும் பிற பொருட்களை உள்ளடக்கிய சத்யா விருந்து இல்லாமல் விஷு கனி கொண்டாட்டம் முழுமையடையாது. அந்த சுவையான கேரள உணவுகளை நாமும் செய்து சாப்பிடலாம்.

தோரன்

பாரம்பரிய கேரள சத்யாவின் ஒரு பகுதியான தோரன் என்பது முட்டைக்கோஸ், பழுக்காத பலாப்பழம், பீன்ஸ், பாகற்காய் மற்றும் பலவற்றின் கலவையுடன் தயாரிக்கப்பட்ட உலர்ந்த காய்கறி உணவாகும். இது பொதுவாக சாதம் மற்றும் குழம்புடன் ஒரு பக்க உணவாக உண்ணப்படுகிறது. தோரன் கேரளாவின் வடபகுதியில் உப்பேரி என்றும் அழைக்கப்படுகிறது.

மாம்பழ புளிசேரி

கோடையில் பிரபலமான உணவான மாம்பழ புளிசேரி என்பது பழுத்த மாம்பழம், தேங்காய் மற்றும் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் கேரள குழம்பு ரெசிபி ஆகும். இந்த உணவை அப்படியே ருசித்து சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். மீன் குழம்போடு சேர்த்து சாப்பிட்டால் டக்கர்.

உன்னியப்பம்

அரிசி, வாழைப்பழம், வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து செய்யப்படும் இனிப்பு பணியாரம் போன்ற ஒரு உணவுதான் விஷு ஸ்பெஷல் சிற்றுண்டி.

எல அடா (இலை அடை)

இது ஒரு பிரபலமான வேகவைத்த அரிசி பான்கேக் டிஷ். இலை அடையில் தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்படுகிறது. இலை அடையில் வாழை இலையுடன் வேகவைக்கப்படுவதால் இந்த பெயர் பெற்றது.

இஞ்சி ரசம்

கேளர புத்தாண்டு நாளில் செய்யப்படும் சிறப்பு உணவு இது. இஞ்சி ரசம்.பருப்பு ரசம் செயவ்து போலவேதான் இதன் செய்முறை. ஆனால், இதில் இஞ்சி சிறிதளவு இடித்து ரசத்தில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget