Pongal 2024: அரசு தரவில்லை என்றால் என்ன? 30 வகையான பொருட்களுடன் பொங்கல் பரிசு - சீர்காழியில் வார்டு கவுன்சிலர் அதிரடி
சீர்காழியில் 300 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில், சீர்காழி நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2022 -ம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் கடந்தாண்டு 2022 -ம் ஆண்டு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்று இருந்ததாக பல்வேறு தரப்பினர் இடையே இருந்து குற்றச்சாட்டும், எதிர்கட்சிகளின் கடும் விமர்சனமும் எழுந்தது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு வழங்கக்கூடிய பொருட்களின் அளவை குறைத்து, பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுநீள கரும்புடன் 1000 ரூபாய் ரொக்கம் என தமிழக அரசு அறிவித்து அதனை தற்போது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் உறக்கம் வழங்கப்படும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், இரண்டு பொருட்கள் மட்டும் வழங்கி ஆயிரம் ரூபாய் வழங்கியது பொது மக்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் அந்த குறையை போக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21- வது வார்டு பனமங்களம் பகுதியின் நகர் மன்ற உறுப்பினரான முழுமதி இமயவரம்பன் தனது வாடிற்கு உட்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை தனது சொந்த செலவில் வழங்கி உள்ளார். அந்த வகையில் தனது வார்டின் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக மகிழ்சியுடன் கொண்டாடிட ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை தங்கள் பகுதியில் உள்ள 300 -க்கும் மேற்பட்ட குடும்பதாரர்களுக்கும் அவர்களது இல்லத்திற்கே நேரடியாக தேடி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை சொந்த செலவில் வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்.
T20 world cup: தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் விராட்? ட்ராவிட் கருத்துக்கு ரெய்னா எதிர்ப்பு!
இதற்கு சீர்காழி நகராட்சியில் உள்ள மற்ற வார்டு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் கூறுகையில் அரசு அறிவித்து கடந்த இரண்டு நாட்களாக வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன்கள் கூட முழுமையாக இன்னும் தங்கள் கைகளுக்கு வராத நிலையில் அதற்காக காத்திருக்கும் சூழலில் நகராட்சி வார்டு கவுன்சிலர் தனது சொந்த செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை வீடு தேடி வந்து வழங்குவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பை மயிலாடுதுறை மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஒருசில மக்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இவர் கடந்த ஆண்டு தனது வார்டு மக்களுக்கு தனது சொந்த செலவில் பொங்கல் பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.