தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
மயிலாடுதுறையில் வகுப்பு ஆசிரியர் அடித்ததால் எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த 11ஆம் வகுப்பு அரசுபள்ளி மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் வகுப்பு ஆசிரியர் அடித்ததால் எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 11 -ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர் மயிலாடுதுறையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவர் ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவன் பள்ளியின் எதிர்புறம் உள்ள வணிக வளாகம் ஒன்றில் எலி மருத்து பிஸ்கடை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மாணவரை கண்டித்த ஆசிரியர்கள்
இதனை அறிந்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளனர். உடனடியாக ஆசிரியர்கள் அந்த மாணவனை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அழைத்த சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இந்த சூழலில் கடந்த ஐந்தாம் தேதி மாணவன் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்ததாகவும், மாணவன் மறுநாள் ஆறாம் தேதி பள்ளிக்கு வந்தபோது வகுப்பு ஆசிரியர் தங்கப்பன் என்பவர் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்டு மாணவனை அடித்தாகவும், மீண்டும் மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவனை வகுப்பு ஆசிரியர் அடித்து, தலைமை ஆசிரியர் அறைக்கு அனுப்பி வைத்தாகவும், தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வனும் மாணவனை அடித்து துன்புறுத்தியதாக கூறுகின்றனர். இதனால் எலி மருந்து பிஸ்கட் சாப்பிட்டு மாணவன் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
தலைமையாசிரியர் மீது தாக்குதல்
இந்த சூழலில் மாணவனை பார்க்க வந்த தலைமை ஆசிரியரை மாணவனின் தாயார் ஆத்திரத்தில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு விசாரணை செய்து கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை தங்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் சொல்லவில்லை என்றும், மருத்துவமனை ஊழியர் ஒருவர் சொல்லிதான் தெரியவந்ததாகவும் மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் மாணவனிடமும், ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர்களின் விளக்கம்
இச்சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், இந்த மாதத்தில் ஒரு நாள் மட்டுமே மாணவன் பள்ளிக்கு வந்ததாகவும், கடந்த மாதம் பாதி நாள் பள்ளிக்கு வராததால் ஆசிரியர் பெற்றோரை அழைத்து வர சொன்ன நிலையில், மாணவன் அழைத்து வராததால் ஆசிரியர் கண்டித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - சீர்காழி அருகே சோகம்
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)