மேலும் அறிய

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - சீர்காழி அருகே சோகம்

சீர்காழி அருகே பழையாரில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மீனவ பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

சீர்காழி அருகே பழையாரில் மீனவர் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மீனவ பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழையார் மீனவர் கிராமம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது பழையார் மீனவர் கிராமம். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். சுமார் 1000 பைபர் படங்கள், நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மூலம் கிராம மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - சீர்காழி அருகே சோகம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமம் 

இந்நிலையில் சுனாமியின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமத்தின் மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்து மின் இணைப்புகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்வாரியம் சார்பில் புதிய மரங்கள் நடப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகள் கடந்த நிலையில் அக்கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மிகவும் பழுதடைந்து ஆபத்தான முறையில் இருந்து வருகிறது.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - சீர்காழி அருகே சோகம்

ஜாயிண்ட் மேல் ஜாயிண்ட்

மேலும் மிகவும் சேதம் அடைந்த மின் கம்பிகள் அவ்வபோது அறுந்து விழுவதும், அதனை முழுவதுமாக மாற்றாமல் ஜாயிண்ட் இணைப்பு கொடுத்து, ஏராளமான ஜாயிண்டுகளுடன் மின் கம்பிகள் அமைக்கப்பட்டு மிகவும் ஆபத்தான முறையில் மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அக்கிராம மீனவர்கள் பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும், மின்வாரிய அதிகாரி செவி சாய்க்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும், மேலும் மாதாந்திர மின்பாதை பராமரிப்பு பணிகளும் கிராமத்தில் முறையாக மேற்கொண்டு மின்கம்பிகள் மீதுபடும் மரக்கிளைகளையும் அகற்றாமல் இருந்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - சீர்காழி அருகே சோகம்

பெண் மீது அறுந்து விழுந்த மின்கம்பி

இந்நிலையில் பழையார் பீச் ரோடு புது நகரைச் சேர்ந்த பாண்டியன் என்பரவது 60 வயதான மீன் வியாபாரியின்  மனைவி ஜோதி தனக்கு சொந்தமான கூறை வீட்டின் அருகே இருந்த இடையூறாக இருந்து வந்த மரக்கிளைகளை ஆள் வைத்து வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளை மின் கம்பியின் மீது விழுந்து மின் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. அதில் கூரை வீட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த ஜோதி மீது மின்கம்பி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக துடிதுடித்து இறந்துள்ளார். 

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - சீர்காழி அருகே சோகம்

காப்பாற்ற சென்றவர் படுகாயம் 

அப்போது கொடக்காரமூலை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ஜோதியை காப்பாற்றுவதற்காக முயன்றுள்ளார். அதில் அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு, உடலில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ஜோதியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - சீர்காழி அருகே சோகம்

கிராமமக்கள் குற்றச்சாட்டு 

இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், பழையாறு மற்றும் பழையாறு புதுநகர் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் 25 வருடங்களுக்கும் மேலாக பழமையானது. ஆகையால் இவைகள் அவ்வப்போது அறுந்து விழுந்த விழுவதும், அதனை மின் ஊழியர்கள் நேரில் சென்று புதிய மின்கம்பிகளை ஜாயிண்ட் இன்றி முழுநீள கம்பியை மாற்றாமல் அறுப்பட்ட இடத்தில் மட்டும் மீண்டும் இணைத்து சரி செய்து வந்தனர். மின் கம்பிகள் மிகவும் பழமையானதாக அறுந்து விழும் நிலையில் இருந்து வருவது குறித்தும், அதனை மாற்ற உரிய நடவடிக்கை பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம்.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - சீர்காழி அருகே சோகம்

ஆனால் இதுநாள் வரை அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதேபோல் பழைய மின்கம்பிகளில் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு பல துண்டு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அருந்து விடும் நிலையில் இருந்து வந்த மிகப் பழமையான மின் கம்பிகளை அதிகாரிகள் மாற்றத் தவறியதால் இன்று மின்கம்பி அறுந்து விழுந்து ஒரு பெண்ணின் உயிரை பறித்துள்ளது என குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
Embed widget