மேலும் அறிய

“காவல்துறை உங்கள் நண்பன்” - சொல்லுக்கு இலக்கணமாக செயல்படும் காவலர்கள் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி..!

மயிலாடுதுறையில் பெண் காவல் ஆய்வாளரின் அன்பால் முதியவர்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகிறனர். 

வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளில் மயிலாடுதுறை காவல்துறையினர் இறங்கியுள்ள நிகழ்வு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மூத்த குடிமக்களை குறிவைத்து குற்றச் சம்பவங்கள்

தமிழ்நாட்டில் வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களை குறிவைத்து குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது தற்போது தொடர்கதையாக இருந்து வருகிறது.  இந்நிலையில் இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கபாடி ஆகிய நான்கு தாலுக்காக்களில் இருக்கும் 13 காவல்நிலைங்களுக்கு உட்பட்ட வீடுகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்கள் குறித்து காவல்நிலையம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

Papua New Guinea: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு: 2000 பேர் புதைந்துள்ளதாக ஐ.நா தகவல்..

“காவல்துறை உங்கள் நண்பன்” -  சொல்லுக்கு இலக்கணமாக செயல்படும் காவலர்கள் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி..!

மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு செல்லும் காவல்துறையினர்

இதற்காக சீனியர் சிட்டிசன் ரெஜிஸ்டர் ஒன்றை நிர்வாகித்து, அதன்படி அந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை போலீஸார் சென்று, அந்த வீட்டில் வசிக்கும் முதியவர்களை சந்திப்பதுடன், அந்த வீட்டில் ஏற்கெனவே காவல்துறையால் வழங்கப்பட்ட பட்டா புத்தகத்திலும் கையெழுத்து இட போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தனியே வசிக்கும் மூத்த குடிமக்களை மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 

Fact Check: சிறுமியிடம் அத்துமீறலா? காங்கிரஸ் கட்சி நிர்வாகியை பெண்கள் தாக்கியதாக பரவும் தகவல் உண்மையா?

“காவல்துறை உங்கள் நண்பன்” -  சொல்லுக்கு இலக்கணமாக செயல்படும் காவலர்கள் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி..!

மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் வசிக்கும் 72 வயதான காந்தி - செல்வகுமாரி  தம்பதியினரின் மகள் அமெரிக்காவிலும், மகன் சென்னையிலும் உள்ளதால் தம்பதியினர் இருவர் மட்டும் வீட்டில் தனியே உள்ளனர். இந்த சூழலில் அவர்களை சந்தித்த காவல் ஆய்வாளர் சுப்ரியா அவர்களுக்கு பழங்கள் வழங்கி நலம் விசாரித்ததுடன், வீட்டின் முன்பு இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சப்தம் கேட்டால் கதவைத் திறக்க வேண்டாம் என்றும், பட்டா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள காவல் நிலைய எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினார். 

Watch Video: அமெரிக்க சிறுவனுக்கு கிடைத்துள்ள புது வாழ்வு.. பயோனிக் கையால் கிடைத்த இடது நம்பிக்(கை)..!

“காவல்துறை உங்கள் நண்பன்” -  சொல்லுக்கு இலக்கணமாக செயல்படும் காவலர்கள் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி..!

ஆறுதலாக பேசிவரும் காவல் ஆய்வாளர்

வீட்டில் தனியே வசித்து வரும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமில்லாமல், ஆறுதலாக பேசிச்சென்றது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என மூதாட்டி செல்வகுமாரி நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். இதேபோல், சீனிவாசபுரம் காமராஜர் தெருவில் வசிக்கும் 89 வயதான லில்லி நகோமி என்ற மூதாட்டியையும் காவல் ஆய்வாளர் சுப்ரியா சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மாவட்ட காவல்துறையின் இந்த முன்னெடுப்பு மூத்த குடிமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதனை சமூக ஆர்வலர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Vijay - Jason: “சினிமாவில் அப்பாவை போல எண்ட்ரீ.. நிச்சயம் சாதிப்பாய்” - விஜய் மகனை புகழ்ந்த ஸ்ரீமன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget