மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்த மயிலாடுதுறை மாவட்டம் - எதில் தெரியுமா...?
படைவீரா் கொடிநாள் நிதி வசூலில் மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 3 -ம் இடம் பிடித்துள்ளது.
படைவீரா் கொடிநாள் நிதி வசூலில் மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 3-ஆம் இடம் பிடித்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளார்.
கொடி நாள்
ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள், அந்த நாட்டின் ராணுவ வீரர்கள். இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வான்படை, தரைப்படை, கப்பல் படை என்று முப்படைகள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பான பணியினால்தான், இந்திய மக்களாகிய நாம் அனைவரும் மற்ற நாடுகளின் அச்சுறுதல்களில் இருந்து பாதுகாப்பாக வாழ முடிகிறது. அத்தகைய இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாள்தான், 'கொடி நாள்' ஆகும்.
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
டிசம்பர் 7
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ம் தேதியை, 'படைவீரர் கொடி நாள்' என்று இந்திய அரசும், அதன் கீழ் உள்ள இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இந்த நடைமுறை 1949-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் கொடி நாள் நன்கொடை வசூலிக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும், படைவீரர்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், பணியின் போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.
Viruchigam New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
மூன்றாம் இடம் பிடித்த மயிலாடுதுறை மாவட்டம்
இந்நிலையில் படைவீரா் கொடிநாள் நிதி வசூலில் மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 3-ஆம் இடம் பிடித்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 -ஆம் தேதி அன்று மத்திய பாதுகாப்பு அமைச்சக குழுவினரால் டிசம்பர் மாதம் 7-ம் நாள் படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்க முடிவு எடுக்கப்பட்டது.
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
இந்திய நாட்டின் முப்படைகளில் பணியாற்றிய பாதுகாப்பு படைவீரர்கள் தங்களது இளமைக்காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை நமது தேசத்திற்காக தன்னலம் கருதாமல், தங்களது உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழந்து நாட்டிற்காக அரும் பணியாற்றி வருகின்றனர். அவர்களது அயராத கடமைகளுக்கு நாம் காட்டும் நன்றியுணர்வின் வெளிப்பாடாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி நாடு முழுவதும் முன்னாள் படைவீரர் கொடிநாள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
இலக்கை தாண்டி வசூல்
அதன்படி, நமது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கொடிநாள் நிதி வசூல் இலக்காக அரசினால் 68,90 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்துறை அரசு அலுவலர்களின் சீரிய முயற்சியினால் அரசின் இலக்கினைத் தாண்டி 85,35,458 ரூபாய் (123.93 சதவீதம்) கூடுதலாக வசூலிக்கப்பட்டு, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.