மேலும் அறிய

தீபாவளி பண்டிகையில் இதை செய்யுங்கள்.. இவற்றை செய்யாதீர்கள்... வேண்டுகோள் வைத்த மாவட்ட ஆட்சியர்..!

தீபாவளிப் பண்டிகையை பசுமைப் பட்டாசுகளுடன் மாசு இல்லாத கொண்டாட்ட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: மகிழ்ச்சியும் ஒளியும் நிறைந்த தீபாவளித் திருநாள் இந்த ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் ஒலி மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சுற்றுப்புறம் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவும் அரசின் நடவடிக்கைகளும்

தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வது வழக்கம். இருப்பினும், இத்தகைய கொண்டாட்டங்களின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. குறிப்பாக, பட்டாசுகளால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசானது சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கு உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 23.10.2018 அன்று ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. இந்த ஆணையின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பசுமைப் பட்டாசுகளை மட்டுமே இனி வருங்காலங்களில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்துப் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், மாநில அரசுகள் திறந்த வெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மக்களை வலியுறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாகத் தீபாவளி பண்டிகையன்று காலை மற்றும் இரவு என தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் அதே நேரக்கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தீவிர விழிப்புணர்வுப் பணிகள்

பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உடல் நல பாதிப்புகள் குறித்துப் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமைப் படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில், பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பல துறையினரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் மற்றும் வழிகாட்டுதல்கள்

சுற்றுச்சூழலைப் பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்பதை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனை மனதில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவதற்குப் பின்வரும் நடைமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை:

 * பசுமைப் பட்டாசுகள் மட்டுமே: பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

 * கூட்டு முயற்சி: மாவட்ட நிர்வாகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாகப் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் மாசு மற்றும் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

 * குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்: அரசு அனுமதித்துள்ள காலை 6 முதல் 7 மணி மற்றும் இரவு 7 முதல் 8 மணிக்குள் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டியவை:

 * தொடர் சரவெடிகளைத் தவிர்க்க: அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும்.

 * அமைதி காக்கும் பகுதிகள்: மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் பிற இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 * பாதுகாப்பற்ற இடங்கள்: குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியைக் கொண்டாடி மகிழ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் "அனைவருக்கும் இதயங்கனிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
காவலர்களின் மனஅழுத்தம் போக்க புதிய முயற்சி: மயிலாடுதுறையில் உடற்பயிற்சி மையம் மற்றும் குழந்தைகள் காப்பகம்..
காவலர்களின் மனஅழுத்தம் போக்க புதிய முயற்சி: மயிலாடுதுறையில் உடற்பயிற்சி மையம் மற்றும் குழந்தைகள் காப்பகம்..
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
சீர்காழியில் போர் பதற்றம் தணிய வழிபாடு: மயிலாடுதுறையில் 30 யாக குண்டங்களில் சிறப்பு வேள்வி!
சீர்காழியில் போர் பதற்றம் தணிய வழிபாடு: மயிலாடுதுறையில் 30 யாக குண்டங்களில் சிறப்பு வேள்வி!
ABP Premium

வீடியோ

Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்
DMK MLA Candidate Thiruvasagam | ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
Embed widget