மேலும் அறிய

சம்பா சாகுபடிக்கு ஆபத்து! மயிலாடுதுறை மாவட்டத்தில் தண்டுத்துளைப்பான், புகையான் தாக்குதல் - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் உடனடியாக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் தண்டுத்துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு ஆகியவற்றின் தாக்குதல்களும், உவர் தன்மையினால் பாசி வளர்ச்சியும் தென்படுகின்றன. இந்த அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் உடனடியாக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மாறி வரும் தட்பவெப்பநிலையால் பாதிப்பு

தமிழ்நாட்டில் மாறி வரும் தட்பவெப்பநிலை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் ஒருசில இடங்களில் தண்டுத்துளைப்பான், புகையான் மற்றும் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்கள் தென்படுகின்றன.

இந்தத் தாக்குதலின் அறிகுறிகள் பின்வருமாறு:

 * தண்டுத்துளைப்பான் தாக்குதல்: இளம்பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடுதல் மற்றும் நெல்மணிகள் பால் பிடிக்காமல் பதராகி வெண்கதிர்களாகக் காணப்படுதல்.

* இலைச்சுருட்டுப்புழு தாக்குதல்: நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்து, பச்சையத்தை சுரண்டி விடுவதால் இலைகள் வெண்மையாகக் காணப்படுதல்.

 * புகையான் தாக்குதல்: தாக்கிய பயிர்கள் காய்ந்து “பயிர் தீய்ந்தது” போன்ற அறிகுறிகள் தென்படுதல்.

* பாசி வளர்ச்சி: உவர் தன்மையினால் சில இடங்களில் நெல் வயல்களில் பாசி வளர்ச்சி ஏற்பட்டு, பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்படுதல்.

கூட்டு வயல் ஆய்வு மற்றும் அறிவுரைகள்

நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கீழ்வேளூர் விஞ்ஞானி, வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டாக வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இதர இடங்களிலும் பொருளாதார சேதநிலை குறித்து வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள்

எனவே, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக வட்டார வேளாண் அலுவர்களைத் தொடர்புகொண்டு பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு முறைகள்

1. தண்டுத்துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்த:

 * ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP 400 கிராம் என்ற அளவில் தெளிக்கலாம்.

2. புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த:

 * ஏக்கருக்கு பைமெட்ரோசின் 50% WG 120 கிராம், குளோதையானிடின் 50% WG 8-9.6 கிராம், டினோடிபியூரான் 20% SG 60-80 கிராம் அல்லது பிப்ரோனில் 5% SC 400 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.

3. நெல் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த:

 * ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் அல்லது புளுபென்டியமைடு 20% w/wsc 20 மில்லி அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரடு 50% SP 400 கிராம் அல்லது குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5% SC 60 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.

4. பாசி வளர்ச்சியைத் தடுக்க மற்றும் பயிர் வளர்ச்சியை மேம்படுத்த:

 * வயல்களில் பாசி படர்ந்திருந்தால், ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட்டினை 20 கிலோ மணலுடன் கலந்து, தண்ணீர் பாயக்கூடிய 10 இடங்களில் பைகளில் கட்டி வைக்க வேண்டும்.

* ஏக்கருக்கு 1 கிலோ 19:19:19 காம்ப்ளக்ஸ் உரத்தை இலை வழியாகத் தெளித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்திடவும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை

மேலும், விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுந்தாள் உரப்பயிர்களைப் பயன்படுத்தவும், யூரியா, டிஏபி போன்ற உரங்களைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் சாகுபடியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதைத் தவிர்த்து பயிர்சுழற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சம்பா மகசூலை இழப்பின்றிப் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
மின் கட்டணப் பிரச்சனையா? புது கனெக்ஷன் வேண்டுமா? மயிலாடுதுறை மக்களே இன்று இங்க போனா உடனே தீர்வு!
மின் கட்டணப் பிரச்சனையா? புது கனெக்ஷன் வேண்டுமா? மயிலாடுதுறை மக்களே இன்று இங்க போனா உடனே தீர்வு!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget