அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் - ஏன் தெரியுமா...?
தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ள விதமாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ளவது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுடம் ஆய்வு கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தென்மேற்கு பருவமழை
2025 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை இந்த மே 27-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது என்றும், இது தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பரவும். இதேபோன்று, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் இன்று மே 21-ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து வலுவடையக் கூடும். இதனால், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
தயார் ஆகும் மாவட்ட நிர்வாகம்
தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ள மயிலாடுதுறை மாவட்டம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மழை, புயல், வெள்ளம், இடி மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆட்சியர் முக்கிய அறிவுரைகள்
- கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
- மழைக்காலங்களில் மின்சாரம், ஆறு, குளங்கள் போன்ற ஆபத்தான இடங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
- பருவமழை தொடர்பான பணிகளுக்குத் தேவையான அனைத்து சாதனங்களையும் அந்தந்த துறை அலுவலர்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்
மழை, வெள்ளம், மின்சாரம் பாதிப்பு, குடிநீர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் மற்றும் கைபேசி எண்களைப் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்:
- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் - 04364-1077
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்: 94426-26792
- மயிலாடுதுறை மின்சார வாரியம்: 04364-252218, 9498482319
- சீர்காழி மின்சார வாரியம்: 04364-279301, 9445854006
- மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை: 04364-222277, 8668171501
- சீர்காழி நெடுஞ்சாலைத்துறை: 04364-276336, 9842382883
- பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டு அறை: 04364-222315, 04364-225904
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்களும் கலந்துகொண்டு, பருவமழைக் காலத்திற்கான தங்களது தயார்நிலையை குறித்து விளக்கினர். வரவிருக்கும் தென்மேற்குப் பருவமழையால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு காக்க மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.






















