மேலும் அறிய

Sivagangai: உலக மரபு நாளில் தொல்லியல் சின்னங்களை, பாரம்பரியத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் - தொல்நடைக் குழு விழிப்புணர்வு

சிவகங்கையில் தமிழக அரசு விரைந்து இவ்விடத்தில் அகழாய்வு செய்ய வேண்டும், இதுவே சிவகங்கை தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆவலாக உள்ளது என்று தெரிவித்தார்.

தொல்நடைக் குழு

தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்போம். உலக மரபு நாளில் தொல்லியல் சின்னங்களை, பாரம்பரியத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் நாள் உலக மரபு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா தெரிவித்ததாவது: தொன்மை எச்சங்களே நமது முன்னோர்களின் வாழ்வியல், பழக்கவழக்கங்கள், பண்பாடு, பாரம்பரியம், வரலாறு, அரசியல் ஆகியவற்றை எடுத்துச் சொல்கின்றன. அவ்வகையான தொல்லியல் சான்றுகள், எச்சங்களை நாம் விழிப்புணர்வு இல்லாது, என்னவென்று அறியாமல், சிதைத்து வரும் நிலையும் உள்ளது. தொல்லியல் எச்சங்கள், சான்றுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதுகாத்தல், போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக உலக அளவில் உலக மரபு நாள் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இன்றைய நாளில் தொல்லியல் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களை கட்டணம் இல்லாமல் பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

உலக மரபு வாரம்

நவம்பர் 19 முதல் 26 வரை உலக மரபு வாரமாக, உலக அளவில், அரசு மற்றும் தொல்லியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர். 

சிவகங்கையில் தொல்லியல் சின்னங்கள். 

சிவகங்கையும் பல வரலாற்று எச்சங்களையும் தொல்லியல் சான்றுகளையும் உள்ளடக்கிய பகுதியாக உள்ளது.

கீழடியால் சிவகங்கைக்குப் பெருமை.

கீழடி மதுரையை ஒட்டிய பகுதியாக இருந்தாலும், சிவகங்கை மாவட்டமாதலால் அது சிவகங்கை மாவட்டத்திற்கு உலக அளவில் பெரும் மதிப்பை தந்துள்ளது. சிவகங்கை பகுதியும் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள், 2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துகள், தொடர்ச்சியான நூற்றாண்டுகளின் எழுத்து வளர்ச்சி  கொண்ட எழுத்தமைதிக் கல்வெட்டுகள், ஏழு எட்டாம் நூற்றாண்டு குடைவரைக் கோவில்கள் பாரம்பரியமிக்க செட்டிநாட்டு வீடுகள் என பல தொன்மை எச்சங்களையும் வரலாற்றுச் சான்றுகளையும் கொண்டுள்ளன. ஆனால் இது குறித்த பொதுவான விழிப்புணர்வு இல்லாமல் நாளும் நாளும் தொல்லியல் எச்சங்கள் சிதையும் நிலையும் ஏற்படுகின்றன.

சிவகங்கை திருமலை. 

சிவகங்கை அருகில் உள்ள திருமலை பாறை ஓவியங்கள், சமணப் படுக்கைகள் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் பெருமளவில் சிதைவுக்குள்ளாகியுள்ளன. தமிழகத் தொல்லியல் துறையினரின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு பல வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாமல் பாறை ஓவியங்கள்,சமணப் படுக்கைகள் பெரும் சிதைவைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருமலையில் முழு நேர காவலரை நியமித்து இந்த தொல்லியல் எச்சங்களை சான்றுகளை பாதுகாக்க வேண்டும்.

சிவகங்கை தொல் நடைக்குழு.

சிவகங்கை தொல்நடைக் குழு தொல்லியல் எச்சங்களை அடையாளப்படுத்துதல், பாதுகாத்தல், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உலக மரபு நாள் மற்றும் உலக மரபு வாரத்தை கொண்டாடுதல் போன்ற பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

காளையார் கோவில் பாண்டியன் கோட்டை அகழாய்வு. 

சிவகங்கை தொல்நடைக் குழு காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில், தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் மேற்பரப்பு கள ஆய்வில், இதுவரை பல தொல்லியல் சான்றுகளை வெளிப்படுத்தி உள்ளது. மோசிதபன் என்று எழுதப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்து பொறித்த பானையோடு, வட்டச் சில்லுகள்,குறியீட்டுடன் கூடிய பானையோடுகள், சங்க கால மேற்கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள், எலும்பாலான கருவிகள் போன்றவற்றை கண்டெடுத்துள்ளது. 

தமிழகத் தொல்லியல் துறை தகவல். 

தமிழக தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்து அகழாய்வு வேண்டி தொல்லியல் துறை அமைச்சரிடம் விண்ணப்பம் கொடுத்ததில், அமைச்சரவர்களின் வழிகாட்டுதலில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும் என்ற தகவலை சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கடிதமாக வழங்கியுள்ளனர். காளையார் கோவில் பாண்டியன் கோட்டையானது சங்க கால வாழ்விடமாக, கோட்டையாகக் கருதப்படுகிறது, இவ்விடத்தில் அகழாய்வு செய்யும் பொழுது இன்னும் நமது வரலாற்றை பண்பாட்டைக் கூடுதலாக வெளிக்கொண்டுவர முடியும், எனவே தமிழக அரசு விரைந்து இவ்விடத்தில் அகழாய்வு செய்ய வேண்டும், இதுவே சிவகங்கை தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆவலாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget