மேலும் அறிய
Advertisement
பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - மதுரையில் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்
திமுக அரசு மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளதாக பா.ஜ.க., தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “பாரத பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற 1 கோடி பயனாளிகளுடன் செல்பி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கிவைத்துள்ளேன். மத்திய அரசின் அதிகளவிற்கு பெண் பயனாளிகள் தான் பயன்பெற்றுள்ளனர், கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களும் பயனாளிகள் தான். பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் அடிப்படையில் பெண்களை மையப்படுத்தி ஆட்சியை நடத்திவருகிறார். பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு என்பது தி.மு.க., மக்களுக்கு திட்டங்கள் செய்துள்ளதால் ஓட்டு போடுவார்கள் என்றால் எதற்கான வாக்காளர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கி மக்களை அடைத்துவைக்கின்றனர். மக்களை சுற்றுலா அழைத்துசெல்வது போன்ற புதிய யுக்தியை கையாண்டுவருகின்றனர். தி.மு.க., அரசின் மீது மக்களின் அதிருப்தி் கடுமையாக உள்ளது. அதனை சரிகெட்டுபார்க்கிறது. ஆனால் அது நடக்காது தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் சிறுமி கூட்டு பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
மருத்துவகல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது , உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள் நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துகொள்ளலாம்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கல்பனா சாவ்லா விருது பெற்றவருக்கு தலையாரி வேலை கூட கிடைக்கவில்லை ; வேதனையில் மாற்றுத்திறனாளி வீரங்கனை !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion