மேலும் அறிய

EPS Press Meet: சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில்தான் பார்க்க முடியும் - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில் தான் பார்க்க முடியும் அதுதான் தொடர்ந்து வருகிறது என நாங்குநேரி பிரச்னை குறித்து ஈ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

 மதுரை விமான நிலையம் வந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்..,” அ.தி.மு.க., பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டேன் மாநாட்டின் போது தொண்டர்கள் வந்து செல்வதற்கு ஏற்ற சூழலை கட்சியினர், மூத்த கட்சி நிர்வாகிகள் மேற்பார்வையில் இந்த மாநாட்டின் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு அரங்கம், நுழைவு வாயில், உணவு வழங்கப்படும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
 
நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் கூறியது குறித்த கேள்விக்கு
பொதுத் தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு பல்டி அடிக்கிறார்கள்.

EPS Press Meet: சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில்தான் பார்க்க முடியும் - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
 
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவிற்கு நடைபெற்ற சம்பவம் குறித்து முதல்வர் அறிவித்தது குறித்த கேள்விக்கு
 
1989 இல் நடைபெற்ற சம்பவம் ஞாபகம் வந்து அதை வெளிப்படுத்தியுள்ளதாக மக்கள் பார்க்கிறார்கள். மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டனர். எம்பி கனிமொழி இதில் சில கருத்துக்களைச் சொன்னார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வை குறித்து பேசினார். அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன் அந்த அடிப்படையில் அதை நான் இங்கு தெரிவிக்கிறேன். சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் எதிர்க்கட்சியின் தலைவர், பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது. முதல்வர் கண்ணெதிரே ஒரு பெண் மீது நடைபெற்ற தாக்குதல் நடைபெற்றதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்.
 
ஆனால் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து மீண்டும் முதல்வரானார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய போது மீண்டும் முதல்வராக தான் இங்கு வருவேன் என்று சபதம் மிக்க அதை நிறைவேற்றினார். இன்றைய தினம் முதலமைச்சர் பொய்யான செய்தியை சொல்கிறார். சட்ட பேரவையில் முதல்வர் கருணாநிதி பேசியதற்கு ஜெயலலிதா பதிலளிக்க முற்பட்ட போது தான் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்தனர். தற்போது முக்கிய அமைச்சராக இருப்பவர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். ஒரு சில அமைச்சர்கள் அவரை கடுமையாக தாக்கினார். சட்டப்பேரவையில் கருப்பு தினமாக அந்த நாளை பார்க்கிறேன். சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம் பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றது இல்லை. ஆனால் முதல்வர் இதை கொச்சைப்படுத்தி பேசுகிறார். 

EPS Press Meet: சாதி சண்டை, மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில்தான் பார்க்க முடியும் - எடப்பாடி பழனிசாமி தாக்கு!
 
நாடாளுமன்றத்தில் இதற்காக குரல் எழுப்பினார்களா. 22 நாட்கள் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக பாசன விவசாயிகள் உரிமையை பெறுவதற்காக நாடாளுமன்றம் மன்றத்தை ஒத்தி வைக்க செயல்பட்டது. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீட் தேர்வில் ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள்.
 
தேவர் கூட்டமைப்பு மாநாட்டை புறக்கணித்தது குறித்த கேள்விக்கு
சமூக நீதியை காப்பதே அதிமுகதான். 
 
எதிர்க்கட்சி கூட்டணி குறித்த கேள்விக்கு:
 
இந்தியா என்கிற பெயர் மக்களுக்கானது அதை வைத்து விட்டார்கள் அதுவே தவறு. பெங்களூர் மாநாட்டில் இந்த ஆதரவு வேண்டுமென்றால் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார். கண்டிஷன் போட்டு தான் கூட்டணியில் அமர்ந்தார். கெஜ்ரிவால் அவருக்கு அந்த த்ராணி உள்ளது. ஆனால் தமிழகத்தில் காவிரி விவகாரத்தில்  கெஜ்ரிவாலை போல உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எங்களுக்கான பங்கை காவிரியில் திறந்து விட்டால் இந்த கூட்டத்தில் இடம் பெறுவேன் என்று முதல்வர் அறிவிப்பு கொடுத்திருந்தால் தண்ணி வந்து சேர்ந்திருக்கும். பெங்களூரில் நீர்வளத் துறை அமைச்சரை முதல்வர் சந்தித்தார் அப்போதாவது இது சம்பந்தமாக பேசி இருக்கலாம்.
 
நாங்குநேரி விவகாரம் குறித்த கேள்விக்கு
 
ஜாதி சண்டை மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில் தான் பார்க்க முடியும் அதுதான் தொடர்ந்து வருகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Embed widget