மேலும் அறிய
Advertisement
"நீட் தேர்வுக்கு எதிராக பாடுபட்டவர்கள் நாங்கள்” - செல்லூர் ராஜூ
நீட்டுக்கு எதிராக அ.தி.மு.க., பாடுபட்டது ; தி.மு.க., காங்கிரஸ், வெளி வேசம் மட்டும் போடுகிறது - செல்லூர் கே.ராஜூ காட்டம்
தமிழ் மொழிக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவு கூறும் “ மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் ” இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் மலர் தூவி மரியாதை செய்யப்படுகிறது. மதுரையில் தமுக்கம் மைதானத்திற்கு வெளியே உள்ள தமிழன்னை சிலைக்கும், மொழிப்போர் தியாகிகள் திருவுரு படங்களுக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," தமிழ்மொழிக்காக தி.மு.க., எதுவுமே செய்யவில்லை. தமிழ் வளர்ச்சி எந்த ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. தலைவர் எம்.ஜி.ஆருக்கும், அம்மாவிற்கும் போட்டியாக செய்ய வேண்டும் என கோவையில் செம்மொழி மாநாடு நடத்தினர். ஆனால் அதிலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். உலக தமிழ்சங்க அறிஞர்கள் சொன்னதை கூட எடுத்துக் கொள்ளவில்லை. நீட் தேர்வை கொண்டுவரக்கூடாது என அ.தி.மு.க., பாடுபட்டது. ஆனால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கூட்டணி தான் முழு முயற்சி எடுத்துக் கொண்டுவந்தது.
காங்கிரஸ் தான் நீட் தேர்வை கொண்டு வர வாதாடியது. ஆனால் எடப்பாடியார் அரசு ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என நீட் தேர்வில் 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது. மதுரைக்கு புரட்சிப் புயல் வைகோ இன்று வர உள்ளார். அவர் மனாட்சிபடி சொல்லட்டும். ஒரு அனிதா இறந்ததற்கு குரல் கொடுத்த அவர்கள், தி.மு.க., ஆட்சியில் 12 மாணவர்கள் உயிரிழந்தது குறித்து ஏன் கேட்கவில்லை. வாய் மூடி மெளனியாக இருப்பது ஏன். தி.மு.க., ஏன் நீட் தேர்விற்கு எதிராக அழுத்தம் கொடுக்கவில்லை. சோத்தில் அறைந்த பிண்டங்களாக கூட்டணி கட்சிகள் இருப்பது ஏன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏன் இப்படி அமைதியாக இருக்கின்றனர். நீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தை முடக்கி இருக்க வேண்டாமா. காவிரி பிரச்னையின் போது நாங்கள் 48 நாட்கள் முடக்கினோம். ஆனால் தற்போது தி.மு.க., நீட்டை ஒழிப்போம் என வெளி வேசம் மட்டும் போடுகிறது" என்றார்.
அமைச்சர் நாசர் குறித்து இன்றைய இரவு பொதுக்கூட்டத்தில் பேசுவதாக தெரிவித்து கிளம்பினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஈரோடு இடைத்தேர்தலில் சுயேச்சையாக களம் காண வலியுறுத்தி, மக்கள் நீதி மைய ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion