மேலும் அறிய
Advertisement
Irukkangudi Mariyamman : நோய் தீர்க்கும் இருக்கன்குடி மாரியம்மன்.. வேண்டியதை தரும் சக்தியென குவியும் பக்தர்கள்..
Irukkangudi Mariyamman Temple: அர்ஜுன நதி மற்றும் வைப்பாறு இடையே உள்ள மேற்கு பகுதிக்கு வா என்று அம்மனே அழைத்து, சித்தருக்கு காட்சி தந்ததாகவும் நம்பப்படுகிறது
Irukkangudi Mariyamman Temple
இருக்கன்குடி மாரியம்மன்
கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் அம்மனுக்கு, வடக்கே அர்ஜுனா அறு, தெற்கே வைப்பாறு. இரண்டு ஆறுகளும் கங்கை போல் பாவிக்கப்படுவதால் (இரு-கங்கை) என்று போற்றப்பட்டுள்ளது. இதுவே பின்னாளில் இருக்கன்குடி என விளங்கியதாக சொல்லப்படுகிறது. இருக்கன்குடி மாரியம்மன் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, துடியான இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.
நோய் தீர்க்கும் மாரியாம்மன்
பொதுவாக எல்லா அம்மன் சன்னதிகளிலும் அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கும்படி வைத்திருப்பார். ஆனால் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சுவாமி இந்த அகிலத்தையே ஆட்கொண்டு ஆக்குதலும், அழித்தலையும்தானே செய்வதுபோல் தனது வலது காலை மடித்து இடது காலை தொங்க விடுகிறார். இந்த அமைப்பே இந்த கோயிலின் மிக சிறப்பாக பார்க்கப்படுகிறது. இருக்கன்குடி மாரியம்மன் சில அமைப்பு வித்தியாசமாக இருப்பதோடு, பக்தர்களை கண்களை சிமிட்டாதபடி பார்க்க வைக்கிறது.
அத்தனை அழகான அமைப்பினை அம்மன் கொண்டிருக்கிறார். இருக்கன்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் அம்மை நோய் அதிகப்படியாக இருந்த சூழலில், அதனை தீர்த்து வைக்க சாணத்தினை கிராமங்களில் தெளிக்க பெண்கள் சாணங்களை சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி ஒருவர் சாணம் எடுக்கும் போது அப்பகுதியில் ஒரு சிலை தென்பட்டுள்ளது. உடனடியாக கிராமத்தினரை அழைத்து வேறொரு இடத்திற்கு சிலை மாற்றியுள்ளனர். ஆனால் அங்கு சாமியாடிய பெண் ஒருவர், என்னை கிடைத்த இடத்திலேயே வைத்து பூஜிக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறுகின்றனர். அதன்படி சுவாமி அங்கேயே ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளார். தற்போது கோயில் அமைந்திருக்கும் இடமே அது என்று நம்பப்படுகிறது.
இதனால் அம்மன் நோய் தீர்க்கும் வல்லமை கொண்டவராக இருக்கிறார். குறிப்பாக அம்மை நோய், கண் பார்வை பிரச்னை, உடல் சார்ந்த பிரச்னை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சர்வ வல்லமையாக நின்று அருள் பாலித்து நோயினை தீர்ப்பதாக நம்பப்படுகிறது.
அம்மனுக்கு தீச்சட்டி - ஆயிரங்கண் பானை
இதற்காக அம்மனுக்காக தீச்சட்டி எடுத்தல், காது குத்துதல், மொட்டை எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் உடல் குறை உள்ளவர்கள் உருவம் வைத்து வழிபடுகின்றனர். இது தவிர கயிறு குத்துதல், அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல், கரும்புத் தொட்டில் கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களும் செலுத்தப்படுகிறது. ஆடி மாதம் தை மாதம் பங்குனி மாதம் உள்ளிட்ட கடைசி வெள்ளிக்கிழமைகளில் இங்கு சிறப்புமிக்கதாக அமைகிறது. மதுரை அருகே உள்ள சதுரகிரி மலையில் வாழ்ந்துவந்த சித்தர் ஒருவர் அம்மனை தரிசிக்க வேண்டியிருக்கிறார் என்பது ஐதீகம்
அப்போது அசிரீரி ஒலியை சித்தரே அடைய, அர்ஜுன நதி மற்றும் வைப்பாறு இடையே உள்ள மேற்கு பகுதிக்கு வா என்று அம்மனே அழைத்து சித்தருக்கு காட்சி தந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கேயே சிலயான அம்மன், அதற்கு பிறகு ஆற்றின் நடுவே மணலால் மூடியபடி புதைந்துவிட்டார் என்பது ஐதீகம்
அசாதாரண அம்மை நோய்காலம் ஏற்பட்ட போது, சிலை சிறுமியின் கண்ணுக்கு தட்டுப்பட்டு பின்னரே கோயிலாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின் அப்பகுதி மக்களின் குல தெய்வமாக மாறிய, மாரியம்மன் இன்று தென் தமிழகத்தின் சிறப்பு மிக்க அம்மன் கோயிலாக விளங்குகிறது. விடுமுறை நாட்களில் இந்த இருக்கன்குடி மாரியம்மனை தரிசித்து வரலாம்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai crime ; பண மோசடி வழக்கில், உசிலம்பட்டி அ.தி.மு.க., சேர்மன் மகன் கைது செய்யப்பட்டார் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion