மேலும் அறிய
Advertisement
Viral Video: ஒரு அளவே இல்லையா? பாம்பை கடிச்சு தின்னா கொரோனா போய்டுமா? : சம்பவம் செய்த மதுரை நபர்
கொரோனா நோய்க்கு மருந்து என உயிருள்ள பாம்பை கடித்து தின்றுள்ளார் மதுரையை சேந்த ஒரு நபர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு மருந்து என கூறி உயிருள்ள பாம்பினை கடித்து திண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. விவசாயக் கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் வயல் வெளியில் சுற்றி திரிந்த பாம்பு ஒன்றினை உயிருடன் பிடித்து, கொரோனா நோய்க்கு இது அரிய மருந்து எனக் கூறிக் கொண்டே அந்த காணொளியில் அதை தனது வாயில் வைத்து கடித்து உண்ணுகிறார்.
அதனை மற்றொரு நபர் வீடியோ எடுக்கவே கொரோனாவுக்காக இந்த பாம்பை நான் கடித்து திண்ணுகிறேன் என கூறிக்கொண்டே அதனை பரவசமாக உண்கிறார். அந்த நபரின் இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion